Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலுங்குதே கமலாலயம்.. கொஞ்சம் இருங்க.. இன்னும் 2 நாள்தான்.. அண்ணாமலை ரெடியாயிட்டாரு லிஸ்ட்டும் ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2ம் கட்ட பாதயாத்திரைக்கு, மாநில பாஜக தலைவர் ரெடியாகிவிட்டார்.. இதோ அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டது.. இதையடுத்து, 2 முக்கிய விஷயங்களில் கவனம் குவிந்துவருகிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முதற்கட்ட யாத்திரை கடந்த 22-ந்தேதி நெல்லையில் முடிவடைந்தது... இதற்கு பிறகு, 2-ம் கட்ட யாத்திரை விரைவில் தொடங்க போவதாக கூறப்பட்டு வந்தது.

Annamalai 2nd Phase Yatra Places Announced and what are the Tamil Nadu BJPs 2 Major Plans

அதன்படி, வருகிற 4-ந்தேதி அதாவது திங்கட்கிழமை தொடங்குகிறார். தொடர்ந்து 28-ந்தேதி வரை 19 நாட்கள் யாத்திரை செல்கிறார். அவர் யாத்திரை செல்லும் இடங்களை யாத்திரை பொறுப்பாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டு உள்ளார்.

லிஸ்ட் வந்தாச்சு: அதில், "4-ந்தேதி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் யாத்திரையை தொடங்குகிறார். 5-ந்தேதி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், 6-ந்தேதி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், 7-ந்தேதி உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, 8-ந்தேதி கம்பம், போடிநாயக்கனூர், 9-ந்தேதி பெரியகுளம், 12-ந்தேதி கொடைக்கானல், 13-ந்தேதி ஆத்தூர், நிலக்கோட்டை, 14-ந்தேதி நத்தம், திண்டுக்கல் பகுதியில் யாத்திரை மேற்கொள்கிறார்.

அதேபோல, 15-ந்தேதி வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், 16-ந்தேதி பழனி, 21-ந்தேதி காங்கேயம், தாராபுரம், 22-ந்தேதி மடத்துக்குளம், உடுமலைபேட்டை, 23-ந்தேதி வால்பாறை, பொள்ளாச்சி, 24-ந்தேதி கொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, 25-ந்தேதி கோவை தெற்கு, சிங்காநல்லூர், 26-ந்தேதி கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், 27-ந்தேதி கூடலூர், ஊட்டி, 28-ந்தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் யாத்திரை செல்கிறார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த 2ம் கட்ட பயணமானது, மிகுந்த கவனத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. காரணம், அதிமுக கூட்டணியில், வழக்கம்போல் இணைந்து, இந்த முறையும் பாஜக போட்டியிட நினைக்கிறது.. அதிலும், தென்மண்டலத்தில் காலூன்றவும், பாஜகவின் வாக்கு பலத்தை அதிகரிக்கவும் முயன்று வருகிறது.

2 வியூகங்கள்: எனவே, தன்னுடைய சொந்த பலத்தையும் தாண்டி, வாக்கு சதவீதத்தையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக பாஜக உள்ளது. அந்தவகையில், 2 விதமான வியூகங்களை கையில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

முதலாவதாக, மாநில தலைவர் அண்ணாமலையின் யாத்திரை திட்டங்களில், சில அதிரடிகளை செய்ய போகிறார்களாம். சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று ஏற்கனவே அண்ணாமலை யாத்திரை நடத்தி முடித்துள்ளார்.. இந்த பகுதிகளிலெல்லாம், மக்களுடன் நேரடி தொடர்பும் அண்ணாமலைக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதிரடி உத்தரவு: அதனால், இந்த யாத்திரை வெறுமனே, ஒரு பயணமாக முடிந்துவிடாமல், பாதயாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் கிராமங்களிலேயே பாஜகவினர் தங்கி, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதுவும் மக்களோடு மக்களாக, பாஜகவினர் கிராமங்களில் தங்கி, இத்தகைய பணிகளை மேற்கொள்ளும்போது, பாஜகவின் கிராஃப் உயருமென்றும் நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்ல, ஆன்மீக உணர்வை வளர்ப்பதற்கு முக்கியத்துவத்தை தராமல், தமிழக பாஜகவில் பலர் ஒதுங்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த தொய்வை களைய வேண்டும் என்பதற்காகவே, விநாயகர் சதுர்த்தியை மையமாக வைத்து அடுத்த அதிரடியை பாஜக செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

விழிப்புணர்வு: அதன்படி, அனைத்து பூத்களிலும் விநாயகர் சிலை பிரதிஷ்டை, வழிபாடு செய்து, இதன்மூலம் ஆன்மீகத்துக்கான முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் முன்னெடுக்க ஆலோசித்து வருகிறார்களாம். அநேகமாக, இந்த திட்டம், 2ம் கட்ட யாத்திரையில், மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது பயணத்துக்கு மாநில தலைவர் தயாராகிவிட்டார்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை, திமுக வலுவாக உள்ள இடங்களிலெல்லாம், அதிக கவனத்தை செலுத்தி வருவதாக தெரிகிறது.. ஏற்கனவே, 5 முக்கிய தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு களப்பணியையும் தொடங்கிய நிலையில், புது அதிரடிகளை, அண்ணாமலை கையில் எடுக்க போவதாக சொல்கிறார்கள்..

அறிவாலயம்: பாஜகவின் ஒவ்வொரு அணுகுமுறையையும், திமுகவும் கவனிக்காமல் இல்லை.. எனவே, அண்ணாமலை யாத்திரை செல்லும் இடங்களிலெல்லாம், தங்களது வாக்கு வங்கியை தக்க வைக்கவும், மேலும் வலுப்படுத்தவும், அறிவாலயம் தரப்பு மும்முரமாகி வருவதாக சொல்கிறார்கள்.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+