பேய் வேண்டாம்னு பிசாசுக்கு வாக்களிக்க வேண்டாம்.. தவெகவை மறைமுகமாக சாடிய அண்ணாமலை
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களில் யார் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். மாற்றம் வேண்டும் என்பதற்காக பேயை விட்டு பிசாசை திருமணம் செய்துவிட வேண்டாம் என அண்ணாமலை தவெகவை மறைமுகமாக சாடியுள்ளார் [Annamalai].
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நமக்கு எந்த கட்சியுடனும் தனிப்பட்ட சண்டை இல்லை. எனக்கும் விஜய்க்கும் வாய்க்கால் சண்டை இல்லை. எனக்கும், சீமானுக்கும் சொத்து பிரச்சனை இல்லை. ஆனால் ஆளத்தகுதியானர்கள் தான் ஆட்சிக்கு வர வேண்டும். அந்தக் கட்சிக்கு கட்டமைப்பு இருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்ள கூடிய தலைவராகவும் இருக்க வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் வருகிறார்களா
சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று அறிவித்து 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாக அறிவித்திருப்பது பெரிய விஷயம். ஆனால் இந்த தேர்தல் ரிஸ்க் எடுக்கும் தேர்தல் அல்ல. விஜய் ரூ.250 கோடியை விட்டு அரசியல் வந்திருப்பதையும் வரவேற்கிறேன். ஆனால் அது அவர்களுக்கான தேர்தல் அல்ல. இந்த தேர்தலில் திமுக ஆட்சியை மாற்ற வேண்டும்.
எந்தப் பகுதியாக இருந்தாலும் அங்குள்ள பிரச்சனைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். காமராஜர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டை 2 முறை முழுமையாக வலம் வந்தவர். நான் யார் மீதும் தனிப்பட்ட விமர்சனம் வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் வேட்பாளராக உள்ள எத்தனை பேர் வீட்டை விட்டு வெளியில் வந்து அந்த தெருவில் இறங்கியுள்ளனர்.
பேயை விட்டு பிசாசை
மீனவர் பிரச்சனை என்றால் எத்தனை மீனவர் குப்பங்களுக்கு சென்று அவர்களுடன் உணவருந்தி பிரச்சனைகளை கேட்டுள்ளனர். சாலை போட வேண்டும், மேம்பாலம் பழுது பார்க்க வேண்டும், மெட்ரோ சந்திப்பு மாற்ற வேண்டும் போன்ற எதுவாக இருந்தாலும் முதலமைச்சருக்கு தெரிய வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் தான் ஆட்சி செய்வார்கள்.
இன்றைக்கு தமிழகத்தை ஆளத்தகுதியானவர்கள் யார். கட்சி கட்டமைப்புடன் யார் வைத்துள்ளனர். யார் வந்தால் மக்கள் பிரச்சனை சரியாகும் என பார்க்க வேண்டும். பேய் வேண்டாமென்று பிசாசை கல்யாணம் செய்த மாதிரி ஆகிவிடும். திமுக பேய் வேண்டாம் என்று சொல்லி, மாற்றத்துக்காக வாக்களிக்கிறேன் என்று பிசாசை கல்யாணம் செய்துவிடக் கூடாது. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை.
மேம்படுத்துங்கள்
தகுதியை மேம்படுத்திவிட்டு வாருங்கள் என்கிறோம். அரசியல் என்பது மக்களோடு மக்களாக வியர்வை சிந்தி, அவமானப்பட்டு, கஷ்டப்பட்டு வருவோர் மட்டுமே ஆட்சி செய்ய தகுதியானவர்கள். தகுதி படுத்தாமல் மாற்றம் என்று வந்தால் அதை மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழ்நாடு மக்கள் அவ்வளவு எளிதாக ஏமாற மாட்டார்கள். இந்த தேர்தலில் பிராடு மாடல் ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என்றார்.
-
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications