திமுக ஆட்சியில் மக்கள் துன்பம்.. குடும்பத்துக்கு 10 ஆயிரம் கொடுப்பது தப்பு இல்லை! அண்ணமலை
சென்னை: மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக துன்பத்தில் உள்ளனர். இதனால் அதிமுக ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்வது தவறாக தெரியவில்லை. மக்களுக்கு பயன்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என நினைப்பது தவறு என தமிழக அரசு ரூ.5 ஆயிரம் கொடுத்திருந்தபோது அண்ணாமலை விமர்சித்து இருந்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கியுள்ளனர்.

10 ஆயிரம் கொடுப்பது தவறில்லை
அந்த வகையில் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என்றும் தெரிவித்து இருந்தார். தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சியினரும் பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் தமிழக முழுவதும் தெருமுனை பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கோவை நேரு நகரில் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக துன்பத்தில் உள்ளதால், அதிமுக ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்வது தவறாக தெரியவில்லை. மக்களுக்கு பயன்படும் என்று கூறினார்.
மக்களுக்கு பயன்படும் என பேச்சு
அண்ணாமலை பேசுகையில், "தமிழகத்தில் இதுவரை பாஜகவினர் 10,300-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரசார கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. 20 ஆயிரம் என்ற இலக்கை நோக்கி பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். திமுகவின் குறைகளை மக்களிடம் சொல்ல இந்த கூட்டம் ஏதுவாக இருக்கும்.
தமிழகத்தில் எல்லா வரியும் உயர்த்தியுள்ளது திமுக. திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கின்றது. சொத்து வரி கட்ட முடியவில்லை. தண்ணீர் வரியினையும் உயர்த்திவிட்டனர். சட்டத்துக்கு புறம்பாக கனிம வளம் சுரண்டப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு குடும்பத்துக்கு ரூ.10,000 கொடுப்பது என்பது தவறானதாக தெரியவில்லை. மக்களுக்கு பயன்படும்.
திமுகவை விமர்சித்த அண்ணாமலை
கடந்த 5 வருஷமாக மக்கள் அதிக துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். நடப்பு நிதி ஆண்டில் திமுக அரசு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால் 3,000 கோடி பற்றாக்குறை. கடன் சுமையை சரி செய்ய வேண்டும்" என பேசினார்.
முன்னதாக திமுக அரசு ரூ.5 ஆயிரம் கொடுத்த போது அதனை அண்ணாமலை விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், மக்களுக்கு பணம் வழங்க வேண்டாம் எனக்கூறிவில்லை. பணம் வரும் போரும் அது மக்களுக்கு பலன் அளிக்கும். மாதம் மாதம் ரூ.1000 கொடுப்போம் என்று சொல்லிவிட்டு 20 மாதங்கள் கொடுக்கவில்லை. 20 வது மாதம் முதல் தான் கொடுக்கிறீர்கள்.
இப்போது தான் கோடைகாலம் வருகிறதா?
5 ஆண்டுகள் பொங்கல் பண்டிகை வந்தது. அப்போது எல்லாம் பணம் கொடுக்க வில்லை. ஆனால் தேர்தல் வரும்போது மட்டும் கொடுக்கிறீர்கள். இதனால் தான் திராவிட மாடல் அரசு என சொல்வதை மோசடி மாடல் அரசு என்று சொல்கிறோம். நீங்கள் 60 மாதம் பணம் கொடுத்து இருந்தால், அதனை பாராட்டியிருப்போம்.
28 மாதங்கள் பணம் கொடுக்கவில்லை.
அனைத்து பொங்கல் பண்டிகைக்கும் பணம் கொடுக்கவில்லை. 2024 மற்றும் 2023ம் ஆண்டில் கோடைகாலம் வரவில்லையா? பணம் கொடுப்பது என்பது முதல்வரின் விருப்பம்.. ஆனால் கடன் இல்லாமல் பணம் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் ஓட்டு வரும் என நினைப்பது தவறு.. என்று விமர்சித்து பேசியிருந்தார்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
இசட் பிரிவு பாதுகாப்பு விவகாரம்.. கட்சி தொடங்கிய கையோடு மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்? -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications