100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்.. சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் கொடுப்பீங்களா? லிஸ்ட்டோடு வந்த அண்ணாமலை!
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை ஒதுக்காமல் வஞ்சிப்பதாக மத்திய பாஜக அரசு மீது திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா என்றும் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாஜக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்
"காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க அரசு.
உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
அண்ணாமலை பதிலடி
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?
பட்டியல் போட்ட அண்ணாமலை
இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
— K.Annamalai (@annamalai_k) March 30, 2025
1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339… pic.twitter.com/BzReaRzujw
2) தமிழகத்தை விட மூன்றில் இருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?
முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு எனக் குறிப்பிட்டு ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
அதில், "நஞ்சை கோபி ஊராட்சியில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பணிபுரிந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெ.கணேசன் என்பவர் அவர் பணிபுரிந்த காலத்தில் தினசரி சரியாக பணிக்கு வராமல் பணிக்கு வந்தாக வருகை பதிவேடு காண்பித்து பணி நேரத்தில் அவரது தனிப்பட்ட காரணத்திற்காக வெளியூர்களுக்கு சென்றும் அரசியல் கட்சி சார்ந்த பணிகளிலும் அரசியல் பொறுப்புகளிலும் செயல்பட்டு வந்தார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிக்கு வராத பணியாளர்களை பணிக்கு வந்ததாக கணக்கும் காண்பித்து பல லட்சம் அரசு பணத்தை கையாடல் செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக ஊராட்சியின் பணித்தள பொறுப்பாளர்கள் செயல்பட்டுள்ளனர்.
மேலும் அவருக்கு வேண்டிய பணியாளர்களை பணி செய்ய கூறாமல் உட்கார வைத்தும் நினைத்த நேரத்தில் வீட்டிற்கு சென்று வர அனுமதித்தும் தொடர்ச்சியாக அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இவருக்கு உதவியாளர்களாக நஞ்சை கோபி ஊராட்சியில் 10 க்கு மேற்பட்ட பெண் பணியாளர்களை வேலையில் அமர்த்தி தனக்கு சாதகமாக அரசியல் கட்சி சார்ந்த பணிகளுக்கு உட்படுத்தி அரசுக்கும் அரசு பணிக்கும் எதிராக செயல்பட்டு வந்துள்ளார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர் -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
செல்வப்பெருந்தகை திமுகவில் இணைகிறாரா? அந்த 1 முக்கிய லாபம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி












Click it and Unblock the Notifications