மோடி கட்டளை.. உடனே களத்தில் அண்ணாமலை.. கோவில் மட்டுமல்ல.. மசூதி, தேவாலயத்திலும் இறங்கும் தமிழக பாஜக!
சென்னை: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில், குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, கோவிலை கழுவினார் அண்ணாமலை.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடந்த 12ஆம் தேதி தொடங்கினார். 11 நாள் கடும் விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி சடங்குகளை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறார். தரையில் தூங்கி, அதிகாலையில் எழுந்து மந்திரம் ஓதுவது, தியானம் செய்வது, சாத்வீக உணவுகளை மட்டும் உண்பது என விரதம் இருந்து வருகிறார்.
மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அந்தவகையில், கடந்த வாரம், மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள காலாராம் கோயிலின் வளாகத்தை பிரதமர் மோடி சுத்தம் செய்தார். மேலும், அவர் செல்லும் ராமர் கோவில்களில் சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் இன்று கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில், குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, கோவிலை கழுவினார் அண்ணாமலை. மேலும், பாஜகவினரை கோவில்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தியுள்ளார் அண்ணாமலை.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அண்ணாமலை, "அயோத்தியில் வரும் ஜனவரி 22 அன்று, பகவான் ஶ்ரீராமரின் திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களைச் சுத்தம் செய்ய அறிவுறுத்தியதை அடுத்து, இன்றைய தினம் காலை, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், தமிழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டோம்.

மேலும், இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என 5,000 வழிபாட்டுத் தலங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். தமிழக பாஜக சகோதர சகோதரிகள் இந்த இறைபணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!











Click it and Unblock the Notifications