Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஃபெயிலியர் பேப்பர்.. மஸ்கோத் அல்வா’.. இன்றைய முதல்வர் அன்று சொன்னது ஞாபகம் இருக்கா?: பாஜக அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின் இருந்தபோது, ஆளுநர் உரையைப் புறக்கணித்துப் பேசிய பேச்சுகளை குறிப்பிட்டு, தற்போதைய ஆளுநர் உரையை விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக சட்டசபையில் இன்று சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது.

Annamalai criticized TN Governors assembly address by recalling Stalins old speech


ஆளுநர் உரையைப் புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது.

2018ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின்: நான் தொடக்கத்திலே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு முக ஸ்டாலின்: ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல். எனவே, அரசு எழுதித் தந்திருக்க கூடிய Failure பேப்பர்களை கவர்னர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். எனவே, நாங்கள் அதை கண்டித்து, அவரது உரையை புறக்கணித்து, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

2020ஆம் ஆண்டு முக ஸ்டாலின்: ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து, அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

2021ஆம் ஆண்டும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர். இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும் விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண்.” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டசபையில் நடந்தது: 2024ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருந்தது. ஆளுநர் ஆர்.என். ரவி, 10 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தடைந்தார். தமிழ்த் தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை துவங்கியது.

ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவை துவங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் உரையில் தகவல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தன்னால் ஏற்க முடியாத பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவற்றை வாசிப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அமையும் என்று கூறிவிட்டு, உரையை வாசிக்காமல் அமர்ந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையை வாசித்து முடித்த பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் குறைவாக வாசித்ததை நான் குறையாகச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, ஜனகனமன வாசித்திருக்க வேண்டும் என்பதை ஒரு கருத்தாகச் சொன்னார்கள். எல்லோருக்கும் கருத்துகள் இருக்கும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும் கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என்றார்.

உடனே, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பே வெளியேறினார். அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். தமிழ், ஆங்கிலத்தில் ஆளுநர் உரை, இந்த அவைக்கு வழங்கப்பட்டபடியே அவைக்குறிப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். என்ற அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இன்றைய சட்டசபை நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+