விவசாயிகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? வேளாண் பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி!
வேளாண் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
சென்னை : தமிழ்நாடு அரசு தனது வேளாண் பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2023-2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நேற்று முன்தினம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

விமர்சனம்
குறைந்த சாகுபடி செலவில் அதிக மகசூல் எடுக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக தேர்தல் அறிவிப்பின் போது அறிவித்த நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 கரும்பு டன்னுக்கு ரூ.4,000 தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. திமுக அரசின் வேளாண் பட்ஜெட்டை திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றுள்ள அதேசமயத்தில் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேளாண் பட்ஜெட்டை விமர்சித்துள்ளார்.

போலி வாக்குறுதி
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 4000 ஆகவும் 'உயர்த்துவோம்' என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக.

இன்னும் எத்தனை ஆண்டுகள்?
ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3-வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயிகள் நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக அரசு பதில் அளிக்குமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
-
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications