பதற்றம்! பயம்! செந்தில் பாலாஜி விரித்த வலையில் அண்ணாமலை சிக்கிட்டாராமே? என்ன "இவர்" இப்படி சொல்றாரே?
சென்னை: செந்தில் பாலாஜி வைத்த டிராப்பில் அண்ணாமலை மாட்டிக்கொண்டார், தனது வாட்ச் போட்டோ வைரலாக வந்த போதே அண்ணாமலை உஷாராகி இருக்க வேண்டும், அப்போதே அண்ணாமலை என்ன சொல்ல வேண்டும் என்று யோசித்து இருக்க வேண்டும், ஆனால் அண்ணாமலை அதை செய்யவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த பில் குறித்து முதலில் கேள்வி எழுப்பியது அமைச்சர் செந்தில் பாலாஜிதான், பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? என்று கேட்டுள்ளார். சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வாட்ச் வாங்கிய பில் எங்கே என்று திமுகவினர் அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அண்ணாமலையோ பில்லை ஏப்ரல் மாதம் கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார். இந்த வாட்ச் விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு..

அண்ணாமலை
அண்ணாமலை 24 மணி நேரமும் மீடியாவை பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார். சில நடிகைகள் தங்களை பற்றி கிசு கிசு வந்தால் கூட சந்தோசமாக இருப்பார்கள். நம்மை பற்றி பேசுகிறார்களே என்று சந்தோசமாக இருப்பார்கள். அப்படித்தான் அண்ணாமலையும் சந்தோசமாக மீடியா நம்மை பற்றி பேசுகிறது என்று இருந்தார். ஆனால் வாட்ச் விவகாரத்தில் அவரின் பெயர் கெட்டுவிட்டது. வாட்ச் காரணமாக அவரின் நேரம் கெட்ட நேரம் ஆகிவிட்டது. பில் கேட்டதில் இருந்தே அவர் அடங்கிவிட்டார். பில்லை அவரால் காட்ட முடியவில்லை. இதனால் பதற்றம்.. பயம்.. அச்சம் அண்ணாமலைக்கு ஏற்பட்டு உள்ளது.

வாட்ச்
அண்ணாமலை தன்னை ஏழை என்கிறார். என்னிடம் பெரிய விலையுயர்ந்த பொருட்கள் இல்லை என்றெல்லாம் மேடையில் பேசினார். இந்த வாட்சை கட்டிக்கொண்டு தானே பேசுகிறார்? அவர் அப்படி பேசி இருக்கலாமா? இப்போது பில்லை கேட்டால் ஏப்ரல் மாதம் தருகிறேன் என்கிறார். அவர் ஏப்ரல் மாதம் இனி பில்லை காட்டினால் கூட யாராவது நம்புவார்களா? அவரிடம் பில் இல்லை. இருந்தால் அதை காட்டி இருப்பாரே. இந்த வாட்சை அவர் அன்பளிப்பு என்று சொல்லி இருக்கலாம்.

ரபேல்
அவர் கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த போது அன்பளிப்பாக இருந்த போது பெற்றது என்று சொல்லி இருக்கலாம். அவர் அப்படி வாங்கியே இருந்தால் கூட தவறு கிடையாது. ஆனால் நான் வாட்சை வாங்கினேன் என்று கூறி உள்ளார். அங்குதான் அவர் தவறிவிட்டார். உளறிவிட்டாரா, மூளை இன்றி சொல்லிவிட்டாரா என்று தெரியவில்லை. பிரச்னையை முடித்து இருக்கலாம். ஆனால் வாங்கினேன் என்று சொல்வதால் எப்படி வாங்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பில் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அன்பளிப்பு வாங்கினார் என்றாலும் யார் கொடுத்தார்.. எந்த அரசியல்வாதி கொடுத்தார்.. அதற்கு அண்ணாமலை கொடுத்த உபகாரம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

வார் ரூம்
செந்தில் பாலாஜி வைத்த டிராப்பில் அண்ணாமலை மாட்டிக்கொண்டார். தனது வாட்ச் போட்டோ வைரலாக வந்த போதே அண்ணாமலை உஷாராகி இருக்க வேண்டும். அப்போதே அண்ணாமலை என்ன சொல்ல வேண்டும் என்று யோசித்து இருக்க வேண்டும். அண்ணாமலைக்காக வேலை பார்க்க 6 வார் ரூம் இருக்கிறது. பெங்களூர், கோவையில் எல்லாம் வார் ரூம் இருக்கிறது. அவர்கள் யாருமே இந்த வைரல் போட்டோக்களை பார்க்கவில்லையா? உதயநிதியோ, செந்தில் பாலாஜியோ தங்களை ஏழை என்று சொல்லவில்லை. தங்களிடம் ஆடுகள் மட்டுமே இருக்கிறது என்று சொல்லவில்லை. அண்ணாமலைதான் சொல்கிறார்.

பில் கட்ட வேண்டும்
அண்ணாமலைதான் பில் காட்ட வேண்டும். அண்ணாமலை தவறாக பேசிவிட்டார். அண்ணாமலை அனைத்திலும் சிக்கிவிட்டார். அவரின் பணிக்காலத்தில் 2 லட்சம் வழக்கு போட்டேன், 20 ஆயிரம் புத்தகம் படித்தேன் என்று கூறி இருந்தார். இப்படி பொய் மேல் பொய் பேசுகிறார். சொந்த கட்சி நிர்வாகி பற்றியே சொந்த கட்சி கூட்டத்தில் தவறாக பேசுகிறார். பெண் நிர்வாகியின் வீடியோ, ஆடியோ இருப்பதாக பேசுகிறார். இதெல்லாம் தவறு. அண்ணாமலை இப்படி எல்லாம் பேசலாமா? கடந்த 3-4 மாதங்களாக பாஜகவில் நடப்பதை பார்த்தீர்களா?

சூர்யா
சூர்யா, டெய்சி, அலிஷா அப்துல்லா ஆடியோ, காயத்ரி புகார் இதை எல்லாம் பார்க்கும் போது பாஜக எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது என்று தெரிகிறது. பாஜகவில் தமிழ்நாடு முழுக்க பூத் கமிட்டி கூட அமைக்கவில்லை. கட்சிக்கு பூத் கமிட்டியை இல்லை. இதை பொன்னாரே பாஜக கூட்டத்தில் பேசினார். சீனியர் தலைவர் இப்படி சொல்கிறார் என்றால் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications