என்னாது ஜஸ்ட் 4 பேரா.. தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டத்தை கலாய்த்த அண்ணாமலை.. சீறும் அழகிரி
சென்னை: கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து காங்கிரஸ் கட்சியில் ஊறித் திளைத்த பிறகு தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை நான் பெற்று செயல்பட்டு வருகிறேன். இத்தகைய அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என்று கே.எஸ் அழகிரி அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கும்பகோணத்தில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்பகோணம் மேற்கு மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் கும்பகோணம் மாநகரத் தலைவர் மிர்சாவூதீன் பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் உட்பட காங்கிரஸ் கட்சியினரை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

அண்ணாமலை கிண்டல்
இந்த மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து ரயில் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. இந்த ரயிலில் தான் கே.எஸ். அழகிரி சென்னை செல்வதாக இருந்தது. போராட்டம் முடிந்த பின்னர் கே.எஸ். அழகிரியை ரயிலில் ஏற்றி அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல் காந்திக்காக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி நான்கு பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்டதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்து இருந்தார்.

எந்த தண்டவாளத்தில் ரயில் வராதோ
இது தொடர்பாக அண்ணாமலை பேசும் போது, "அண்ணன் கேஎஸ் அழகிரி ரயில்வே தண்டவாளத்தில் நின்று இருக்கிறார்.. எனக்கு கூட ஒரு சந்தேகம்... ஏன்னா திமுக காரர்களும், காங்கிரஸ்காரர்களும் பலே கில்லாடிகள்.. எந்த தண்டவாளத்தில் ரயில் வராதோ அங்கு தான் போய் நிற்பார்கள்.. அது இவங்க ரத்தத்திலேயே இருக்கும். நேற்று காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள், சத்தியமாக சொல்கிறேன், அவரு, கூட 3 பேரு தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.. எதுக்கு ரயிலை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டால், ராகுல் காந்திக்கு இரண்டு வருசம் தண்டனை கொடுத்துட்டாங்க.. அதனால் ரயிலை நிறுத்த போறாம் என்றார்கள்.

கை சின்னத்திற்கே ஐந்து விரல்கள் இருக்கிறது
நான் கேட்கிறேன், ஏன்யா.. காங்கிரஸ் கை சின்னத்திற்கே ஐந்து விரல்கள் இருக்கிறது. நீங்க நாலு பேரா வந்திருக்கிறீர்கள்.. கைசின்னத்துல உள்ள ஐந்து பேர் கூட இல்லாமல், நான்கு பேர் வந்து தமிழக காங்கிரசில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளீர்கள்.. உங்களால் ஒரு எருமை மாட்டக்கூட நிறுத்த முடியாது. நீங்கள் ரயிலை நிறுத்த போறீங்களா?.. " இவ்வாறு அண்ணாமலை கிண்டல் செய்யும் வகையில் பேசினார். இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரயில் முன் மறியல் செய்ய
அரியலூர் மாவட்டம், டி.பழுரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து கொண்டிருக்கும் போது, ராகுல்காந்தி கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டவுடனே கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்குள்ளே உருவான மன எழுச்சியின் அடிப்படையில் உடனடியாக முதல் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து அங்கே வர இருக்கிற ரயில் முன் மறியல் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

400 பேர் இருக்கிறார்களா?
உடனடியாக எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு 4 பேர் இருக்கிறார்களா?, 400 பேர் இருக்கிறார்களா? என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பாஜக வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது.

உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சித் தலைவராக, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக, 2 முறை எம்.எல்.ஏ.வாக, ஒருமுறை எம்.பி.யாக மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து காங்கிரஸ் கட்சியில் ஊறித் திளைத்த பிறகு தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை நான் பெற்று செயல்பட்டு வருகிறேன். இத்தகைய அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications