"வாட்ஸ்அப் சாட் முதல் ஹவலா நெட்வொர்க் வரை".. வசமாக சிக்கிய நேரு.. அண்ணாமலை வைத்த முக்கிய கோரிக்கை
சென்னை: டெண்டர் முறைகேடு, பணியாளர் நியமன ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
திமுக அமைச்சர் கே.என். நேரு நகராட்சி நிருவாகத் துறையில் கழிப்பறைகள் அமைத்தல், அவுட்சோர்சிங், நபார்டு திட்டங்கள், கட்டட நிர்மாணம், தூய்மைப் பணியாளர்கள் பணிக்கான அவுட்சோர்சிங் ஒப்பந்தங்கள், தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களுக்கு லஞ்சம் வாங்கியதாகவும், வேலைவாய்ப்புகளுக்கு லஞ்சம் வாங்கியது என ரூ. 1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஊழல்கள் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 252 பக்க அறிக்கையையும் அனுப்பியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெண்டர் முறைகேடு, பணியாளர் நியமன ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: "திமுக ஆட்சியில் ஊழல் நடப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால் தற்போது மலைபோல ஆதாரங்கள் இருப்பதால் தமிழக அரசு இதனை தவிர்க்க முடியாது.
அமைச்சர் கே.என். நேருவின் கீழ் நகராட்சி நிருவாகத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு ரூ. 888 கோடி ஊழலைத் தொடர்ந்து தற்போது ரூ. 1,020 கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை 252 பக்க அறிக்கையை டிஜிபியிடம் சமர்ப்பித்துள்ளது.
அமைச்சர் நேரு தனது உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5% முதல் 10% வரை லஞ்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்த மிகப்பெரிய கொள்ளைக்குச் சமம். வாட்ஸ்ஆப் சாட், லஞ்ச கணக்கீட்டு பட்டியல், ஹவாலா மூலம் பணமோசடி பற்றிய விவரங்களை அமலாக்கத் துறை வழங்கியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசில் சிறப்பாக செயல்பட்ட ஒரே துறை, கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் துறை மட்டுமே. அமைச்சர் கே.என். நேரு விவகாரத்தில் இழுத்தடிப்பதை நிறுத்திவிட்டு டெண்டர் முறைகேடு, பணியாளர் நியமன ஊழல் குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications