சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது.. ஒழித்துக்கட்ட வேண்டும்.. சுதந்திர தினத்தில் அண்ணாமலை சூளுரை

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார் மாநில தலைவர் அண்ணாமலை.

Recommended Video

    75-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா.. தேசியக் கோடியை ஏற்றிய தலைவர்கள் *Tamilnadu | Oneindia Tamil

    பின்னர் அவர், "குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும்" என கூறியுள்ளார். மேலும், "தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது, இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Annamalai insists on abolishing family politics

    "அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும்" என்றும் அண்ணாமலை விருப்பம் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் 76வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். இதில், வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றி இருப்பது பெருமையளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். முன்னதாக சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று பிரதமர் வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தேசிய கொடியை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், "தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது, இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும்" என குறிப்பிட்டார். மேலும், அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும் என்றும் அனைவரும் அதற்காக உழைத்திட வேண்டும் என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "சுதந்திரத்துக்கு பாடுபட்டதில் தமிழ்நாட்டின் பங்கு மிக அதிகம், மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று தமிழ்நாட்டில் தேசியக்கொடி இல்லாத வீடுகளே இல்லை, இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் காட்டியுள்ளனர். பலர் பாஜக அலுவலகங்களில் தேசியக்கொடியை பெற்று, தங்கள் இல்லங்களில் ஏற்றியுள்ளனர்."

    "லஞ்சம் வாங்குவோர், குடும்ப அரசியல் செய்வோரை ஒழித்துக்கட்ட வேண்டும். தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம், குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது, இதை ஒழிக்க பாஜக கடுமையாக உழைக்கும்" என்று கூறினார். இதற்கிடையில் கொண்ட கொள்கையில் இருந்து அடிபிறழாதவர் ஹெச்.ராஜா என ராஜாவுக்கு புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கேசவ விநாயகம், ஹெச்.வி.ஹண்டே, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், குஷ்பு, நாராயணன், வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    English summary
    (குடும்ப அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்): As the 76th Independence Day is being celebrated across the country, state president Annamalai hoisted the national flag at Kamalalayam, the BJP state headquarters in Chennai. Later, he said, "Those who do family politics should be eliminated." Annamalai also mentioned in his speech that "bribery and family politics are rampant in Tamil Nadu and BJP will work hard to eradicate this".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X