என்னது.. அண்ணாமலை பாஜகவில் சேர்ந்துட்டாரா.. அப்போ ரஜினிகாந்த் கட்சி கதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பிரம்மாஸ்திரம் என்று வர்ணிக்கப்பட்டவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை.

Recommended Video

    பாஜகவில் இணைந்த முன்னாள் IPS அண்ணாமலை

    2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தனிக் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அண்ணாமலை பற்றிய பேச்சுக்கள் சமீபகாலமாக அதிகரித்தன.

    ரஜினிகாந்த் கட்சி துவங்குவதற்கும், கர்நாடகாவில், பணியாற்றிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? ஏன் இப்படி எதிர்பார்ப்பு சுற்றி வந்தது.

    கர்நாடக அதிகாரி

    கர்நாடக அதிகாரி

    கர்நாடகாவில் கடுமையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்தான் அண்ணாமலை ஐபிஎஸ். சில மீடியாக்கள் சிங்கம் என்று கூட அவருக்கு அங்கு பட்ட பெயர் வழங்கின. அப்படியிருக்கும்போது, முன்கூட்டியே திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் அண்ணாமலை. கடந்த மே மாதம் பதவியை ராஜினாமா செய்த பிறகு சொந்த மாவட்டமான கரூர் திரும்பினார். இயற்கை விவசாயம் பார்க்கப்போவதாக அறிவித்தார்.

    ரஜினிகாந்த் கட்சி

    ரஜினிகாந்த் கட்சி

    எப்படி அவர் பேட்டியளித்தாலும், இவரது இந்த திடீர் ராஜினாமா பின்னணியில் ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த கட்சி பின்னணி இருப்பதாகத்தான் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனெனில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் முதல்வர் வேட்பாளராக நிற்கப் போவதில்லை என்பதை அறிவித்து விட்டார். வேறு ஒருவரை தான் சுட்டிக் காட்டுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்த நிலையில்தான், அண்ணாமலை, ராஜினாமா விவகாரத்தையும் பொருத்திப் பார்த்தனர் ரஜினிகாந்த் ரசிகர்கள்.

    யூகங்கள்

    யூகங்கள்

    கர்நாடகாவில் நல்ல பெயர் பெற்றவர், இளைஞர்.. எல்லாவற்றுக்கும் மேலாக அண்ணாமலை என்ற அந்தப் பெயர் ரஜினிகாந்துக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், முதல்வர் வேட்பாளராக இவரைத்தான் நிறுத்துவார் என்று பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் கூட இதை கடந்த பல மாதங்களாக பேசி வந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் திடீரென இன்று பாஜகவில் இணைந்துவிட்டார் அண்ணாமலை.

    அப்போ ரஜினி கட்சி?

    அப்போ ரஜினி கட்சி?

    மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால்தான் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் அடுத்த வேளை பசியாறினால் போதும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் தவிர அரசியல் எழுச்சி மனநிலையில் கிடையாது. எனவே, இப்போது(ம்) ரஜினிகாந்த் கட்சி துவங்க போவது கிடையாது என்று அவருக்கு நெருக்கமானவர்கள்.. வருத்தத்தோடு, தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில்தான், அண்ணாமலை, பாஜகவில் இணைந்ததை பொருத்தி பார்க்க வேண்டியுள்ளது.

    தகவல் போய்விட்டதா

    தகவல் போய்விட்டதா

    ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார்.. தங்களுக்கு பொறுப்புகள் கிடைக்கும் என்று ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் பல நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். ஆனால் காத்திருந்து, காத்திருந்து கண்கள் பூத்ததுதான் மிச்சம். எனவே, இப்படியே தானும் காத்திருந்து பொன்னான காலத்தை வீணாக்காமல், இப்போது உள்ள புகழைப் பயன்படுத்தி, இன்னொரு கட்சியில் இணைந்து அரசியல் ஆதாயம் பெறுவது முக்கியம் என்ற முடிவுக்கு அண்ணாமலை வந்துவிட்டதாக தெரிகிறது. ஒருவகையில் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என்ற தகவல், அண்ணாமலைக்கு ரகசியமாக இந்த தகவல் கொடுக்கப்பட்டு இருக்கலாமோ என்னவோ அதுவும் தெரியவில்லை. எது எப்படியோ அண்ணாமலை பாஜகவுக்கு சென்றிருப்பது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்பதற்கான மற்றொரு சிக்னல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

    காத்திருந்து, காத்திருந்து

    காத்திருந்து, காத்திருந்து

    ரஜினி கட்சி ஆரம்பிக்க தவறுவதால் கிடைத்த ஒரு அண்ணாமலையும் கைநழுவி போய்விட்டார். ரஜினிகாந்த்தை நம்பி தான் தனது ஐபிஎஸ் பணியை துறந்து விட்டு வந்தவர் அண்ணாமலை என்ற பேச்சு உண்டு. ஆனால் இன்று நிர்கதியாக நிறுத்தப்பட்டு வேறுவழியின்றி மற்றொரு வலதுசாரி சித்தாந்தம் கொண்ட கட்சி என்பதால் பாஜக பக்கம் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த்தை நம்பி பல தொழில்களையும், பல பணிகளையும் விட்டுவிட்டு காத்திருப்போர் பலருக்கும் இதே ஏமாற்றம்தான் இதுவரை பரிசாக கிடைத்துள்ளது. எனவே இனிமேலாவது ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார், என்று, வழி மீது விழி வைத்து காத்திருந்து வேதனை அடையாமல், "போய் புள்ள குட்டிகள படிக்க வைக்கப்பா.." என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அட்வைஸ் செய்வதை பார்க்க முடிகிறது.

    கிண்டல் மீம்

    கிண்டல் மீம்

    இங்க தற்சார்பு வாழ்க்கை,System சரியில்லை,வலதுசாரியும் இல்லை,இடதுசாரியும் இல்லை,மய்யமும் இல்லைன்னு உதார் விட்டானே அண்ணாமலை அவன யாராவது பாத்தீங்களா Face with tears of joy இதுல அதிகமா அசிங்கபட்டது அண்ணாமலையை முதல்வர் வேட்பாளர் ரேஞ்சுக்கு சில்லறையை சிதறவிட்ட ரஜினி ரசிகர்கள் தான் Face with tears of joy #சங்கி_அண்ணாமலை. இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன்.

    ரஜினிகாந்த் தரப்பு

    ரஜினிகாந்த் தரப்பு

    அண்ணாமலை பிஜேபில ஜாயின் பன்ன போறாரா...

    ரஜினி :

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+