Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. ஆட்சி மாற்றம் வந்தால்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆவேசம்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அண்ணாமலை மீண்டும் ஐபிஎஸ் பணிக்கு தான் போக வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் ஐபிஎஸ் பணிக்கு தான் போக வேண்டும

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. அண்ணாமலை ஐபிஎஸ் ஆகிவிட்டு டெபிட்டேஷனில் பதவிக்கு வந்தவர். பதவி மாற்றத்திற்காக டிரான்ஸ்பர் ஆகி அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என்று அண்ணாமலையை கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

சி.டி நிர்மல் குமார் உள்பட பாஜகவில் இருந்து வெளியேறிய கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் நேரடியாக இணைந்தனர்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 அதிமுக பாஜக மோதல்

அதிமுக பாஜக மோதல்

அதோடு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்ததும் பாஜகவினர் மத்தியில் புகைச்சலை உண்டாக்கியது. அதிருப்தியால் கட்சி தாவுவது சகஜம் என்றாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்து வந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வரவேற்றது பாஜகவினருக்கு கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தது என்றே சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதே அதிமுக - பாஜக இடையே லேசான உரசல் வெளிப்பட்டதை காண முடிந்தது.

ஈரோடு தேர்தல் பிரசாரம்

ஈரோடு தேர்தல் பிரசாரம்

தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்களின் படம் இடம்பெறாமல் இருந்து பின்னர் அழுத்தம் காரணமாக படத்தைச் சேர்த்தனர். இரட்டை இலை யாருக்கு என்று தெரியாமல் இருந்த நிலையில் ஓபிஎஸ்ஸையும் ஈபிஎஸ்ஸையும் பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியிருந்தார். பின்னர் குழப்பங்களுக்கு மத்தியில் தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் நின்றதும் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரமும் மேற்கொண்டார்.

அதிமுகவில் ஒற்றுமை இல்லாததே..

அதிமுகவில் ஒற்றுமை இல்லாததே..

அப்போதே அழையா விருந்தாளியாகவே அண்ணாமலையை அதிமுக நடத்தியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான பிறகு, "அதிமுகவில் ஒற்றுமை இல்லாததே இந்த தோல்விக்குக் காரணம். ஒருங்கிணைந்த, பலமான அதிமுகவையே பாஜக விரும்புகிறது என்ற ரீதியில் அண்ணாமலை கருத்து கூறியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கொந்தளிக்க வைக்கும் விதமாக இருந்தது.

 டிரான்ஸ்பர் ஆகி

டிரான்ஸ்பர் ஆகி

அதிமுக - கூட்டணி முறிகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி என்று அதிமுக திட்டவட்டமாக கூறி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதனால், இந்த சர்ச்சைகள் ஓய்ந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அண்ணாமலையை விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் கடம்பூர் ராஜூ கூறியதாவது:- அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. அண்ணாமலை ஐபிஎஸ் ஆகிவிட்டு டெபிட்டேஷனில் வந்தவர் தான். பதவி மாற்றத்திற்காக டிரான்ஸ்பர் ஆகி அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

 மைக்கை கண்டால் போதும்..

மைக்கை கண்டால் போதும்..

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் ஐபிஎஸ் பணிக்கு தான் போக வேண்டும்.. அரசியல்வாதிகள் எப்போதும் பேச்சுகளை கவனமாக பேசவேண்டும். மைக்கை கண்டால் போதும் எதாவது பேசிக்கொண்டிருக்கிறார்.. அண்ணாமலைக்கு ஒரு வியாதி.. மைக்கை பார்த்தாலே ஏதாவது சல சல வென பேசும் வியாதி.. டிவி சேனல்களில் கூட தற்போது அவர் பேசுவதை பார்த்தால் மக்கள் சேனல்களை மாற்றிவிடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+