எல்லாத்தையும் சகிச்சுக்கணும்.. கலக்கத்தில் எடப்பாடி.. விரட்டி விட்ட அண்ணாமலை? நடந்தது என்ன?
சென்னை: அரசியல் வாக்கு வங்கி நிலவரம் எல்லாம் தெரிந்துதான் அண்ணாமலை எடப்பாடியை விரட்டினார். எடப்பாடிக்கு பலம் இல்லை என்று அண்ணாமலைக்கு தெரியும், என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு நேற்று சென்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை நடந்தது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றார். இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது. எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .

பேட்டி: இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோரில் எதிர்க்கப்பட்டது திட்டமிட்டது அல்லது. அது தென்னெழுச்சியான எதிர்ப்பு. எடப்பாடி பழனிசாமி சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டார். அதே போல் டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்துவிட்டார். அதை எல்லாம் அவர் செய்த தவறு ஓ பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தது. அதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொண்டர்கள் இதனால் கோபம் அடைந்துள்ளனர். பன்னீர்செல்வத்தை கருவேப்பிலை மாதிரி எடப்பாடி மீது தூக்கி எறிந்துவிட்டார் என்று முக்குலத்தோர் கருதுகிறார்கள்.
முக்குலத்தோர் மட்டுமில்லை. பொதுமக்களும் இதைதான் கருதுகிறார்கள். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கப்பட்டார். இது தேர்தலில் எதிரொலிக்கும். நான் இதை உணர்ந்த காரணத்தினாலேயே இப்படி சொல்கிறேன். 2019ல் மனோஜ் பாண்டியன் நல்ல வாக்கு எடுத்தார். பன்னீர் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஓ பன்னீர்செல்வம் இருந்ததால் இதை வென்றனர். அவர் இல்லாமல் இந்த தென் மாவட்ட வாக்குகளை எடப்பாடி வாங்க முடியும். அவருக்கும் இது தெரியும்.
அதனால்தான் தென் மாவட்ட மக்களை கவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி களமிறங்கிவிட்டார் . இதனால்தான் அவர் குரு பூஜைக்கு செல்கிறார். பன்னீர் செல்வம் இல்லாமல் அவர் வென்று நிரூபிக்க வேண்டும். அதனால் எடப்பாடி அவமானம், அசிங்கம் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும். கூட்டணியில் அவருக்கு யாரும் இல்லை. அப்படி இருக்க தென் மண்டலத்தில் அவர் பிரபலம் அடைய இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.

அண்ணாமலை: கூட்டணிக்கு இவர்கள் வருகிறார்கள். அவர்கள் வருகிறார்கள்.. காங்கிரஸ் வருகிறது .. விசிக வருகிறது என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் இவர்கள் எல்லாம் வராமல் எடப்பாடி எந்த முடிவும் எடுக்க முடியாது. முக்குலத்தோர் இல்லாமல் வெல்ல முடியாது. முக்குலத்தோரை எதிர்த்தால் தெற்கு தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்று எடப்பாடிக்கு தெரியும். அதனால்தான் அவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார். இதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்காது. எந்த வகையிலும் அவருக்கு ஆதரவாக வாக்குகளை இந்த விஷயம் பெற்றுத்தராது.
இது எல்லாம் தெரிந்துதான் அண்ணாமலை எடப்பாடியை விரட்டினார். எடப்பாடிக்கு பலம் இல்லை என்று அண்ணாமலைக்கு தெரியும். அண்ணாமலை கோவையில் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது, மந்திரி ஆவார் என்றெல்லாம் கூறினார்கள். கடந்த தேர்தலில்பாஜக அதிமுகவுடன் இருந்தும் கூட குறைவான வாக்குகளை பெற்றது. பாஜக அதிமுக இல்லாமலே அதற்கு முன்பே நல்ல வாக்குகளை வென்றுள்ளது. இதை எல்லாம் புரிந்துகொண்டதான் அண்ணாமலை எடப்பாடியை விரட்டி அடித்துள்ளார்.
அண்ணாமலைதான் எடப்பாடியை விரட்டி அடித்துள்ளார். எடப்பாடி கிறிஸ்துவ, முஸ்லீம் வாக்குகளுக்காக கூட்டணியை உடைத்தார் என்பதெல்லாம் கதை. இதுதான் உண்மையில் நடந்தது, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்












Click it and Unblock the Notifications