அடுத்தடுத்து கழன்று கொண்ட அண்ணாமலை, எல் முருகன்.. கூட்டணியிலும் தனித்துவிடப்பட்ட பாஜக.. போச்சு
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுக ஒரு பக்கம் கூட்டணியை இறுதி செய்யும் நிலையில் உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவின் கூட்டணியில் இணைய பெரிய கட்சிகள் எதுவும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இப்போது புதிய திருப்பமாக பாஜகவின் டாப் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளனர்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் மத்திய பாஜக இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் தற்போது திமுக எம்பி ஆ. ராசாவிற்கு ரூட் கிளியர் ஆகி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த டாக்டர் எல் முருகன் மீண்டும் தேர்வாகிறார். மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.

இதனால் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெரிதாக இல்லை. இதனால் திமுக எம்பி ஆ. ராசாவிற்கு பெரிய அளவில் இனி நீலகிரியில் போட்டி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை கோவை: இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கோவை தேர்தலில் கண்டிப்பாக நிற்க மாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் பாஜகவின் அண்ணாமலை.
கண்டிப்பு: 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்ய பிப்ரவரி 18ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டு உள்ளதாம். நீங்கள் நடைப்பயணம் செய்தது போதும்.. உடனே கூட்டணியை முடிவிற்கு கொண்டு வாருங்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிங்க. 3வது அணி உருவாவதை உறுதி செய்யுங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி பாஜக உத்தரவிட்டு உள்ளதாம். ஆனால் அதிமுக கூட்டணிக்கு பாமக, தேமுதிக செல்வதால்.. பாஜக கூட்டணிக்கு ஆள் வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம்.
பாஜக கூட்டணி இல்லை: இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிமுக கூட்டணிக்கு வர முடிவு செய்துள்ளன.
அதன்படி பாமக 6 சீட். தேமுதிக 3 சீட் என்று இறங்கி வர முடிவு செய்துள்ளன. இரண்டு ராஜ்யசபா இடங்கள் இரண்டு கட்சிக்கும் தலா 1 என்று பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இது போக பணம் கேட்டதில் நான்கில் ஒரு பகுதி பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்.. நாம் பெரிய கூட்டணி அமைப்போம் என்று அதிமுக வைத்த வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டார்களாம்.
பாஜக தனித்துவிடப்பட்டது; இதனால் பாஜக தனித்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாம். முக்கியமாக பாமக, தேமுதிக இல்லை என்றால் பாஜகவின் கூட்டணியில் பெரிய கட்சி எதுவும் இருக்காது. முக்கியமாக புதிய தமிழகம் கூட அதிமுக கூட்டணிக்கு போகும் சூழலில் உள்ளது.
இது போக ஐஜேகே மட்டுமே தற்போது பாஜக கூட்டணிக்கு செல்லும் சூழல் உள்ளது. பாஜகவின் கூட்டணி இன்னும் முழுமையாக உருவாகாததால் விரைவில் கூட்டணி உருவாக்கும் விவகாரத்தில் டெல்லி நேரடியாக தலையிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications