இது டெல்லிக்கே பிடிக்காது.. பெரிய சான்சை மிஸ் செய்த அண்ணாமலை.. எச்சரிக்கும் புள்ளி.. பின்னணி என்ன?

பாஜகவினர் வெளியேறுவதால் அண்ணாமலை கடும் விரக்தியில் இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடியின் உயரம் அவருக்கு தெரியவில்லை. ஒன்றரை வருடத்தில் அவர் தன்னை ஜெயலலிதா மாதிரி, கருணாநிதி மாதிரி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் பலர் அதிமுகவில் இணைந்ததால் அதிமுகவினர் மீது பாஜகவினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதிமுகவை அண்ணாமலையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் அரசியல் செய்ய வந்து இருக்கிறேன். பாஜகவை முன்னேற்ற வந்து இருக்கிறேன். அதை செய்வேன். கலைஞர்.. அம்மா போல முடிவு எடுப்பேன். நான் தலைவன்.. நான் யாருக்கும் கவலைப்பட மாட்டேன்.

நான் தலைவரை போல சில முடிவுகளை எடுப்பேன். அதற்காக நான் பயப்பட மாட்டேன். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் முடிவு எடுப்பேன். பாஜக செட்டில் ஆகும் வரை இங்கே சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும். என்னை டெல்லி மாற்றிவிடும் என்ற பயத்தில் முடிவு எடுக்காமல் இருக்க மாட்டேன், என்று கூறி உள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். .

பேட்டி

பேட்டி

அவர் தனது பேட்டியில், எடப்பாடியின் உயரம் அவருக்கு தெரியவில்லை. ஒன்றரை வருடத்தில் அவர் தன்னை ஜெயலலிதா மாதிரி, கருணாநிதி மாதிரி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். என்னங்க இது? இதில் தெளிவே இல்லை. இவர்தான் அரசியல் பேசுகிறாரா? அவர் இன்னும் போலீஸ்காரர் போல பேசிக்கொண்டு இருக்கிறார். போலீஸ்காரர் போல கட்சி நடத்திக்கொண்டு இருந்தால் அவருடன் தொண்டர்களும் இருக்க மாட்டார்கள். மக்களும் இருக்க மாட்டார்கள். இதுதான் உண்மை. இதுதான் யதார்த்தம். அதை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.

 தோசை

தோசை

நான் தோசை சுடவோ இட்லி சுடவோ வரவில்லை. நான் ஒன்னும் மேனேஜர் இல்லை என்று அவர் சொல்கிறார். அப்படி என்றால் தமிழிசை, பொன் ராதாகிருஷ்னணை அவர் விமர்சனம் செய்கிறாரா? என்ன கொடுமை இது. இங்கே இருப்பவர்கள் வெளியே போனால்தான் புதியவர்களுக்கு இடம் கொடுக்கப்படும் என்று சொல்கிறார். இதுதான் தலைமையா? இது அவருக்கும் பொருந்ததா? புதியவருக்காக அவரை கட்சி தலைமையில் இருந்து மாற்றினால் என்ன செய்வது . ஒரு அரசியல் தலைவர் தொண்டர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.

கட்சி ஒன்றரை

கட்சி ஒன்றரை

கட்சி தொடங்கிய ஒன்றரை வருடத்தில் அவர் போலீஸ் மாதிரி செயல்படுகிறார். டெல்லி தலைமை சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார். அதை பாஜகவிலேயே விரும்ப மாட்டார்கள். டெல்லியே விரும்பாது. பாஜக ஒன்றும் தனி மனித கட்சி இல்லை. அவர்கள் தினமும் 24 மணி நேரமும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் வேறு இருக்கிறது. இவர் ஆர்எஸ்எஸ் கிடையாது. அவர்கள் இதை எல்லாம் விரும்ப மாட்டார்கள். இவர் ஆர்எஸ்எஸ் இல்லை என்பதால் அவரை சாய்க்க பார்ப்பார்கள்.

அண்ணாமலை

அண்ணாமலை

விரக்தி மற்றும் பதற்றத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவர் வாய் தவறி பேசிவிட்டார். அவர் 20 ஆயிரம் புத்தகங்களை படித்து இருக்கிறேன் என்றார். அதை வாய் தவறி கூட சொல்லி இருக்கலாம். ஆனால் கூட்டணி விவகாரத்தில் அவர் எப்படி பதற்றத்துடன் வார்த்தையை விட்டு பேசலாம். அது அவருக்குத்தான் லாஸ். அவருக்குத்தான் பிரச்சனை. தமிழிசை, பொன்னார். எல் முருகன் இருந்த போது திமுக ஆட்சியில் இல்லை. இதனால் அவர்களால் பெரிய அரசியல் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது திமுக ஆட்சியில் உள்ளது. அண்ணாமலைக்கு இது பெரிய சான்ஸ், ஆனால் அவர் அதை மிஸ் செய்துவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+