ஐயா குறிச்சு வச்சுக்கோங்க.. சும்மா பேசல.. திமுகவுக்கு அண்ணாமலை விட்ட சவால் நியாபகம் இருக்கா? போச்சே
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் திராவிட கட்சிகளுக்கு அவர் விட்ட சவால் ஒன்றை வைத்து அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் சில இடங்களில் வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை. எந்த தொகுதியில் வெற்றிபெறவில்லை.

18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது.
அண்ணாமலை தோல்வி முகம்; கோவையிலும் பாஜக தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி முகம் கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 286028 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 203134 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 103838 வாக்குகள் பெற்றுள்ளார்.
அண்ணாமலை சவால் தோல்வி: தமிழ்நாட்டில் பாஜக படுதோல்வி அடைந்துள்ள நிலையில் திராவிட கட்சிகளுக்கு அவர் விட்ட சவால் ஒன்றை வைத்து அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அண்ணாமலை பேச்சு: இந்த நிலையில்தான் மதுரையில் லோக்சபா பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவர் தனது பிரச்சாரத்தில் ஐயா இன்னைக்கு நான் சொல்றேன். குறிச்சி வச்சுக்கோங்க. நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள்.
லோக்சபா தேர்தலுக்கு பின் தென் மண்டலத்தில் ஒரு திராவிட கட்சியும் இருக்காது. திமுக இருக்காது. தேர்தல் முடிந்த பின் கேளுங்கள். நானும் எங்கேயும் செல்ல மாட்டேன். நீங்களும் எங்கேயும் செல்ல மாட்டீர்கள். நான் சும்மா சொல்லவில்லை. குறிச்சி வச்சுக்கோங்க. அரசியல் களத்தை நன்றாக ஆராய்ந்து சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள், என்று சவால் விட்டு இருந்தார்.
அதேபோல் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய அண்ணாமலை.. நான் சொல்கிறேன் உறுதியாக சொல்கிறேன். பாஜக 25 சதவிகித வாக்குகளை வெல்லும். நான் ஒரு மாநில தலைவர். இது தேசிய ஊடகம். லைவில் பேசிக்கொண்டு இருக்கின்றேன். சும்மா சொல்லவில்லை.
நான் பேசுவது ரெக்கார்ட் ஆகும். நான் போகிற போக்கில் சொல்ல முடியாது. சொல்ல கூடாது. நாங்கள் 25 சதவிகிதம் வாக்குகள் எடுப்போம். 500 சதவிகித வளர்ச்சி. நான் சொல்வதை நீங்கள் தேர்தலுக்கு பிறகு உணர்வீர்கள் என்று பேசி இருந்தார்.
இந்த வாய்க்குதான் வச்சு வாய்லயே மிதிச்சு விட்ருக்காங்க pic.twitter.com/gvMMnLCUx5
— சித்ரா தேவி (@chithradevi_91) June 4, 2024
வீணான பேச்சுக்கள்: ஆனால் இந்த பேச்சுக்கள் எல்லாம் வீணாகி உள்ளது. அண்ணாமலையின் பேச்சுக்கள் மிக மோசமான பின்னடைவையே கொடுத்துள்ளன. அந்த கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பாஜக கூட்டணியில், ஏசி சண்முகம், சௌமியா அன்புமணி, ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர், நயினார் கண்டிப்பாக நல்ல வாக்கு வங்கியை எடுப்பார்கள்.
இவர்கள் எல்லாம் பெரிய தலைகள். ஆனால் இவர்களில் கூட ஒருவரும் வெற்றிபெறவில்லை. முக்கியமாக தென்மண்டலத்தில் போட்டியிட்ட எல்லோரும் தோல்வி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications