அண்ணாமலை நடைபயணம்! திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரம் மாற்றம் பின்னணி! மொத்தம் 168 நாட்கள்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செந்தூரிலிருந்து தமிழகம் தழுவிய அளவில் நடைபயணம் தொடங்கவிருந்த நிலையில் இப்போது அது ராமேஸ்வரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜூலை 28ஆம் தேதி அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாதபுரம் வருகை தரவுள்ளார். பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் நடைபயணம் தொடக்க ஊரை திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு மாற்றப்பட்டிருப்பது அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

ஜூலை 28 ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலையின் நடைபயணமானது ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. மொத்தம் 168 நாட்கள் அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணம் மூலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறது பாஜக தலைமை. முதலில் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டுமே அண்ணாமலை நடைபயணத்தில் கலந்துகொள்ளும் வகையிலும் மற்ற இடங்களில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
பாஜக தேசியத் தலைமை என்ன நினைத்ததோ தெரியவில்லை, முழு நடைபயணத்திலும் அண்ணாமலையை பங்கேற்க வைத்திருக்கிறது. எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது அவர் மேற்கொண்ட 'வேல் யாத்திரை' இன்றளவும் பேசக்கூடிய வகையில் அப்போது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கவும் அந்த யாத்திரை அடித்தளம் அமைத்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
என் மக்கள் என் நாடு என்ற முழக்கத்துடன் அண்ணாமலை நடத்தும் இந்த நடைபயணமானது சென்னையில் மட்டும் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை தரப்பிலும் அனுமதி பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?











Click it and Unblock the Notifications