இணைய கட்டண விவகாரம்.. அன்பில் மகேஷ் புதிய கதை சொல்கிறார்.. அண்ணாமலை தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் இணையதள இணைப்புக் கட்டணம் நிலுவையில் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சர் புதிய கதையை கூறுவதாகவும், திமுக அரசால் கல்வித் துறையின் இணையதள இணைப்புக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு சேவை பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த இணையதள இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

annamalai anbil mahesh education

இதுகுறித்து, தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது.

திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீதம் நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?. திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இதுவரை எந்த மாவட்ட கல்வி அலுவலகத்திலும் கட்டணம் கட்டாமல் நிலுவையில் இல்லை. ஆசிரியர் சம்பளப் பிரச்னை, இணைய சிக்கல்கள் இருப்பதாக எந்த தகவலும் இல்லை. சம்பளம் நிலுவை குறித்து எந்த ஆசிரியரும் தகவல் தெரிவிக்கவில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஒன்றிய அரசு சுமார் 2,151 கோடி ரூபாய் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி வழங்காமல் இருந்து வரும் நிலையில், சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்களின் நலனுக்காக எந்த சம்பள நிலுவையோ, எந்த கட்டண நிலுவையோ இல்லாமல் மாநில அரசு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அனைத்தையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிதிருந்தார்.

இதனை மறுத்துள்ள அண்ணாமலை கூறுகையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையென்றால், இணைய இணைப்பு துண்டிக்கப்படும் என்று, கடிதம் வந்திருப்பதாக, இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து, வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்?.

கடந்த மூன்று ஆண்டுகளில், பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ. 5,858.32 கோடி. சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று கடிதம் அளித்து விட்டு, பல திட்டங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது திமுக அரசு.

ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.50 கோடியைக் கட்டுவதற்குக் கூட முடியவில்லையா? என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+