“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை
சென்னை: "தமிழ்நாட்டில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. புதுச்சேரியில் ஒரே நாளில் பரப்புரை செய்த ராகுல் காந்தியும், முதலமைச்சர் ஸ்டாலினும் சந்தித்துக் கொள்ளவில்லை" என தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி, திமுக பெயரை சொல்லி வாக்கு சேகரிக்காததைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை பேசுகையில், "புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். 'ஸ்டாலின்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. 'காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்', 'கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்' என்று மட்டுமே கூறினார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரே நாளில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ராகுல் காந்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அதனால், தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரம் இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது.
ராகுல் காந்தி கோவை விமான நிலையம் வந்து, இங்கிருந்து மாற்று விமானம் மூலம் செல்கிறார். ஆனால் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூட அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, ஒரு அழையா விருந்தாளியாக, ஏதோ ஒப்புக்கு சப்பாணியாக ஒரு கட்சி இருக்கிறது, நாம் வரவேண்டும் என்பது போல அவருடைய மனநிலை உள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை வந்து சென்றார் என்பதை எண்ணிப் பாருங்கள். இதிலிருந்து, இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று தெரிகிறது. ராகுல் காந்தி இங்கு திமுக ஜெயிக்க வேண்டாம் என்று நினைக்கிறார் என நான் பார்க்கிறேன்.
புதுச்சேரியில் ராகுல் காந்தியின் நடவடிக்கையைப் பார்க்கும் போது, தமிழகத்தில் காங்கிரஸின் நடவடிக்கையைப் பார்க்கும் போது, திமுக தலைமையிலான கூட்டணி ஜெயிப்பதை ராகுல் காந்தி விரும்புகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுகிறது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது கோவை வந்திருந்த ராகுல் காந்தி, அங்கிருந்த ஸ்வீட் கடைக்குச் செல்ல சாலையின் குறுக்கே உள்ள தடுப்பில் எகிறி குதித்து சென்று ஸ்வீட் வாங்கி வந்தது வைரல் ஆனது. பிரச்சார மேடைக்கு சென்று அந்த இனிப்பை மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தார் ராகுல் காந்தி.
அதற்கு முன்னதாக 2019 மக்களவைத் தேர்தலின் போது 'இந்தியா' கூட்டணிக்கு ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என முதலில் கூறியவர் மு.க.ஸ்டாலின். இத்தகைய நெருக்கம் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின் இடையே இல்லை என விமர்சிக்கப்படுகிறது. அதனையே அண்ணாமலையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications