3 நாட்களாக நடக்கும் அரசியல்.. பார்க்கவே சலிப்பா இருக்கு.. அண்ணாமலை வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக நடக்கும் காட்சிகள் எனக்கும் சலிப்பை ஏற்படுத்தி இருப்பதாக மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருப்பதால், பொறுமை காக்க வேண்டும் என்று கூறியுள்ள அண்ணாமலை, தவெகவை என்டிஏ கூட்டணியில் இணைக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் கடந்த 3 நாட்களாக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது. என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகுவதாக அறிவித்தார். இதன்பின் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்று கூறியதோடு, அதற்கு 10 நாட்கள் கெடுவைவும் விதித்தார். இதன்பின் இன்று செங்கோட்டையனின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார்.

Annamalai Reacts to Tamil Nadu Politics

அதேபோல் டிடிவி தினகரன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஆடி போயிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அடுத்த 2 மாத காலம் மீடியாவிலேயே கருத்துக்களை சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

டிடிவி தினகரன் பிரதமர் மோடி மீது நல்ல மரியாதை வைத்திருக்கிறார். ஏற்கனவே அவரிடம் பொறுமையாக இருக்குமாறு கூறினேன். நல்லவொரு இலக்குடன் சரியான முறையில் பயணம் செய்ய வேண்டும். கடந்த 3 நாட்களாக நடக்கக் கூடிய செயல்கள் எனக்கும் திருப்தியாக இல்லை. தமிழக வாக்காளராக, ஒரு மனிதராக, பாஜகவின் தொண்டனாக சரியாக படவில்லை.

3 நாட்களாக நடக்கும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் பொறுமையாக இருப்போம். சரியான பாதையில் பயணிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கைப்படி மக்களை சந்திக்கட்டும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளது. விஜய் பாஜகவை முதன்மை எதிரி என்று சொல்லிவிட்டு தனிப் பாதையில் பயணித்து வருகிறார்.

அப்படி இருக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெகவை இணைக்க முடியுமா என்று தெரியவில்லை. புதிதாக கட்சிகளை என்டிஏ கூட்டணியில் இணைப்பதை விட, இருக்கும் கட்சிகளின் மூலம் வலிமைப்படுத்த வேண்டும். அடுத்த 2, 3 மாதங்கள் மிகவும் முக்கியமானது. தலைவர்கள் களத்தில் வரும் போது மக்கள் கவனிப்பார்கள். திமுக இன்னும் பரப்புரையை தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+