இலவச பஸ் பஞ்சாயத்து..மோடியை பிடித்த பிடிஆர்! ’ஓசி’னு சொன்னாங்களே..எங்க போனீங்க? லாக் செய்த அண்ணாமலை
சென்னை: இலவச பேருந்து பயண திட்டம் குறித்து விமர்சித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் இலவச பேருந்து பயணத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு இருப்பதாக கூறும் அமைச்சர் "ஓசி"என விமர்சித்த திமுக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்று மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் ஆகும். ஏற்கனவே மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு பேருந்து பயணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தால் மகளிர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பெண் பயணிகள் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பிங்க் நிற பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர்.
தமிழகம் மட்டும் இல்லாது இந்தியா முழுவதும் பெறும் வரவேற்பு பெற்ற இந்தத் திட்டத்தை பல்வேறு மாநில அரசுகளும் தற்போது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளன. அந்த வகையில் கர்நாடகா தெலுங்கானா ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை அறிவித்து ஆட்சியையே பிடித்திருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். தற்போது மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக இந்தியா டுடே சேனலுக்கு நேர்காணல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி,"சில அரசியல் கட்சிகள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டத்தை அளித்துள்ளன. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும் இலவச பேருந்து பயணத்திட்டன் காரணமாக போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது" என்றார். தமிழகம் மற்றும் கர்நாடகாவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்த விமர்சனத்தை வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பிரதமருக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இது ஒரு கேலிக்கூத்து. கேலிக்கூத்தர்கள் ஒவ்வொருவரும் யார் முதலிடத்துக்கு வருகிறோம் என்பதற்காக போட்டியிடுகின்றனர். மேலும் இந்த காட்சி என்பது பிரதமர் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்பதை விளக்குகிறது.
மேலும் அங்குள்ளவர்கள் ஒரு பத்திரிகையாளராக செயல்பட்டு இருந்திருந்தால் தர்க்க ரீதியாக உடனே சில கேள்விகளை எழுப்பி இருக்க வேண்டும். அதில் முதலாவது கேள்வி இப்படி ஏதாவது ஒரு இடம் உள்ளதா?
A.ஒரு இடத்தில் மெட்ரோ சேவை மட்டுமே இருந்து பஸ் சேவைகள் இல்லாமல் இருக்கிறதா?
B.பொதுப்போக்குவரத்தை பொறுத்தமட்டில் மாணவர்கள், வயதானவர்கள், மாதாந்திர பஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லையா?
C. பஸ் சேவையானது மெட்ரோ ரயிலின் சேவையை பாதிக்கிறதா? என கேட்டிருக்க வேண்டும். சென்னை மெட்ரோ 2ம்கட்ட பணிக்கு (புதிய வழித்தடம்) இன்னும் ஏன் நிதி வழங்க ஒப்புதல் வழங்காமல் மத்திய அமைச்சரவையில் பல ஆண்டுகளாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது?.
அதேவேளையில் சென்னை மெட்ரோவுக்கு பிறகு வந்த பிற நகரங்களுக்கான மெட்ரோ திட்ட அறிவிப்புகள்/ஒப்புதல்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ பணியை மெதுவாக்கும் செயலா? அதேவேளையில் மெட்ரோவில் ஒருவர் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லமுடியாது? என்பதை சுட்டிக்காட்டி இருக்கலாம்" என கூறி இருந்தார்.
இந்நிலையில் இந்த நிலையில் இலவச பேருந்து பயணத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு இருப்பதாக கூறும் அமைச்சர் "ஓசி"என விமர்சித்த திமுக அமைச்சர்களை ஏன் கண்டிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்யிட்டுள்ள பதிவில்," தி.மு.க அரசின் நலன் மற்றும் சலுகைகள் விலைபோகின்றன. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தைப் போல ஒவ்வொரு அமைச்சரும் மாறி மாறி பயனாளியை "இலவச சுமை" என்று இழிவுபடுத்துவது உலகில் எங்கும் இல்லை.
1) பால், மின்சாரக் கட்டணம் போன்ற இதர அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சேமிப்பு என்று அரசு கூறும் பலன் கொடுமையான நகைச்சுவை. வலது பாக்கெட்டை பறித்து, அதே நபரின் இடது பாக்கெட்டில் பொதுநலமாக இறக்கி வைப்பதில் திமுக கைதேர்ந்தவர்.

2) திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 6000 பேருந்துகள் சாலையில் நிறுத்தப்பட்டதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
3) கடந்த 3 ஆண்டுகளாக மின்சார பேருந்துகள் கொள்முதல் அறிவிப்பாகவே உள்ளது.
திமுக அரசின் மாபெரும் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நிதி இலாகாவை இழந்த அமைச்சர், தனக்கில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகையில், அரசுப் பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டர் ஏன் கெல்ட்ரான் (கேரளா) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள விரும்புகிறோம். அரசுக்கு சொந்தமான எலக்ட்ரானிக் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்).
நமது மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் ஒரு பகுதியைக் கொண்ட இந்த ₹1000 கோடி டெண்டரில் ELCOT நிறுவனத்திற்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விளக்கமளிப்பாரா?" என பதிலடி கொடுத்துள்ளார்.
-
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி?












Click it and Unblock the Notifications