Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் அண்ணாமலை.. சொன்னபடியே செஞ்சிடுவாரு? இந்த வெயிலிலும் கன்னியாகுமரியில் மட்டும் புயல்? பலே பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பாஜகவில் நிலவி கொண்டிருக்கிறது. அந்தவகையில் சில தகவல்களும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

2 நாட்களுக்கு முன்பு, அதாவது நடைபயணம் திருப்பூரில் நிறைவுற்ற தினத்தன்று, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், மாற்று கட்சியிலிருந்து பாஜக வருபவர்கள் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.
அண்ணாமலை பேசும்போது, "எங்கள் கட்சிக்கு வரப்போகிறவர்கள் ரொம்ப பெரிய புள்ளிகள்.. பிற கட்சியிலிருந்து பெரிய புள்ளிகள், பாஜகவுக்கு வரும்போது, எங்கள் கட்சியிலுக்கும் பெரிய புள்ளிகளையும் சமாதானப்படுத்த வேண்டியிருக்கிறது.

Annamalai says about vijayadharani and Do you know what happened in Kanniyakumari BJP

அண்ணாமலை: காரணம், இத்தனை காலமாக பாஜகவுக்காக அவர்கள் உழைத்திருக்கிறார்கள். வெளியிலிருந்து பல பெரிய புள்ளிகள் வருவதால், ஏற்கனவே உள்ள தலைவர்களை சமாதானப்படுத்த வேண்டி உள்ளது. அவர்களை எங்கள் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சுருக்கமாக சொல்லப்போனால், பிற கட்சியிலிருந்து வரக்கூடியவர்கள், தேர்தலில் நிற்ககூடிய அளவுக்கு வல்லமையாக வருகிறார்கள். அதனால் அவர்களுக்கான இடத்தை நாங்கள் ஒதுக்க வேண்டியிருக்கிறது. இப்போ அக்கா விஜயதாரணி வந்திருக்காங்க.. கன்னியாகுமரியை பொறுத்தவரை, பாஜக ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கக்கூடிய தொகுதியாகும்.. நிறைய தலைவர்கள் பெற்றிருக்கக்கூடிய தொகுதியாகும்..

ரிசைன்: ஒரு எம்எல்ஏ, இன்னும் இரண்டரை ஆண்டுகள் பொறுப்பு இருக்கும்போதே அதை உதறி தள்ளிவிட்டு, பதவியை ரிசைன் பண்ணிட்டு பாஜகவுக்கு வர்றாங்க.. அப்படி பெரிய பதவிகளை தூக்கி எறிந்துவிட்டு வரும்போது, கட்சியிலிருக்கும் தலைவர்களையும் சமாதானப்படுத்தி, வெளியிலிருந்து வரும் விஜயதாரணி போன்றோர்களையும் கட்சியின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது" என்றார்.

அண்ணாமலை இப்படி சொல்லும்போதே, விஜயதாரணிக்கு கன்னியாகுமரியில் சீட் கன்பார்ம் போல என்ற முணுமுணுப்புகளும் கிளம்பின. அதேசமயம், கன்னியாகுமரியில் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும் இருப்பதால், பாஜக மேலிடம் யாருக்கு சீட் தரப்போகிறதோ? என்ற சந்தேகங்களும் கிளம்பியிருக்கின்றன.

பொன்.ராதா தீவிரம்: பொன்.ராதாவை பொறுத்தவரை. கட்சியின் சீனியர்.. மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே பம்பரமாக தொகுதியை சுற்றி வர துவங்கியவர்.. நிர்வாகிகள் போன் போட்டாலும் எடுத்து பேசாத பொன்.ராதா, இப்போதெல்லாம் நிர்வாகிகளுக்கு தானே போனை போட்டு, தொகுதி வளர்ச்சி குறித்து பேச துவங்கிவிட்டாராம்.

போதாக்குறைக்கு தேர்தல் பணிமனைகளை திறந்து கடகடவென வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார். எனினும், இப்படி சீனியர்களுக்கே பொறுப்புகளை தந்து கொண்டிருந்தால், அடுத்துள்ளவர்கள் மேலே வர வேண்டாமா? அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் ஆதங்கக்குரல்களும் வெடித்து வருகிறதாம்.

விஜயதாரணி: இப்படிப்பட்ட சூழலில்தான், விஜயதரணியின் என்ட்ரி நடந்துள்ளது.. கட்சியில் சேருவதானால் தனக்கு கன்னியாகுமரியை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பேச்சை துவங்கினாராம் விஜயதாரணி.. இதற்காக 6 மாத காலம் டெல்லியிலேயே தங்கியிருந்து, தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக மேலிடத்துக்கு சில அழுத்தங்களையும் தந்து வந்திருக்கிறார். ஆனாலும், பாஜக மேலிடம் அவ்வளவு எளிதாக ஓகே சொல்லவில்லையாம்.

காரணம். கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை, ஆர்எஸ்காரர்கள் வளர்த்தெடுத்த மண் ஆகும்.. இங்கு பொன் ராதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், இன்னொரு ஆர்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட வேட்பாளரையே நிறுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது.. அதனால்தான், இதுவரை விஜயதாரணிக்கு பச்சைக்கொடி எதுவும் காட்டப்படாமல் பொறுமை காக்கிறதாம் பாஜக மேலிடம்.

சாத்தியமா: இதனிடையே, பொன். ராதாகிருஷ்ணனின் பெயர், ஆளுநர் தேர்வில் இருக்கிறதாம்.. அதனால், இந்த தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல் அரசியலில் இருந்து விலக்கப்படுவார் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது..

எனவே, விஜயதாரணிக்கே சீட் வழங்கப்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.. புதுமுகங்களுக்கு இப்படி வாய்ப்பு தருவது பாஜகவுக்கான நன்மதிப்பை மேலும் பெற்றுத்தரும் என்றே நம்பப்படுகிறது.

இருந்தாலும், பல வருட காலமாகவே தமிழக மக்களுக்கு பழக்கப்பட்டு போன "காங்கிரஸின் முகம்", இன்று திடீரென ஆர்எஸ்எஸ் மண்ணில் அறிமுகமாவது எடுபடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+