ரூ 610 கோடியா?.. அந்த அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லை.. என்கிட்ட ரெண்டு டப்பா இருக்கு.. அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னாது ரூ 610 கோடி நஷ்ட ஈடா அதற்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிஜிஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்திருந்தார். மேலும் சில ஆவணங்களை வெளியிட்ட அண்ணாமலை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது அண்ணாமலை கூறும் ஆதாரங்கள் அடிப்படை ஆதாரமற்றவை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். ஆனால் அண்ணாமலையோ நான் மன்னிப்பு கேட்க முடியாது என்றார். இந்த நிலையில் பிஜிஆர் நிறுவனம் குறித்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கருத்துத் தெரிவித்ததாக கூறி பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ட்விட்டரில் பதில்

ட்விட்டரில் பதில்

இதற்கு அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிலளிக்கையில் சார் 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். அறிவாலய அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை. நீதிமன்றங்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் நோட்டீஸை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றார்.

100 கோடி ரூபாய்

100 கோடி ரூபாய்

கடந்த 25 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்யவே முதல்வர் துபாய் சென்றார் என பேசியிருந்தார். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ரூ 100 கோடி கேட்டு நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 சட்ட போராட்டம்

சட்ட போராட்டம்

ஆர் எஸ் பாரதி கூறுகையில் பாஜகவினர் யார் யாரிடம் எப்படி பணத்தை மிரட்டி வாங்கினார் என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. தேவை ஏற்பட்டால் பட்டியலை வெளியிடுவோம். திமுக சட்டப் போரை தொடங்கினால் அண்ணாமலையால் எதிர்கொள்ள முடியாது என கூறியிருந்தார்.

6 மணி நேரம்

6 மணி நேரம்

இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தைரியம், திராணி இருந்தால் என்னை திமுக அரசு கைது செய்யட்டும். இவர்களை போல் நான் நோட்டீஸ் அனுப்பி பணம் எல்லாம் கேட்க மாட்டேன். அடுத்த 6 மணி நேரத்திற்கு நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்.

ரூ 610 கோடிக்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை

ரூ 610 கோடிக்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை

முடிந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும். பிஜிஆர் நிறுவனம் ரூ 500 கோடியும் ஆர் எஸ் பாரதி ரூ 100 கோடியும், திமுக எம்பி வில்சன் ரூ 10 கோடியும் கேட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். ஆக மொத்தம் ரூ 610 கோடிக்கெல்லாம் நான் வொர்த்தே இல்லை. நான் ஒரு சாதாரண ஆள். எங்க வீட்டில ரெண்டு டப்பா, ரெண்டு ஆடு, மாடுகள்தான் இருக்கிறது. வேண்டுமானால் அதை வந்து எடுத்துகிட்டு போங்க என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+