#Exclusive ஊழலைச் சொல்லி தமிழகத்தில் ஓட்டு வாங்க முடியாத நிலை உள்ளது! அண்ணாமலை சிறப்பு பேட்டி
சென்னை: ஊழலை சொல்லி தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. மக்கள் நிறைய இடங்களில் ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஏனென்றால் அவர் அதைவிட பணிகளைச் செய்வதில் திறமையானவராக இருக்கிறார். ஊழல் எதிர்ப்பை ஓட்டாக மாற்றுவதற்கு இன்னும் ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டும் என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவரது பேட்டி வருமாறு:
கேள்வி: திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த 3 ஆண்டுகளில் அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்களா?
அண்ணாமலை: தமிழ்நாட்டு மக்களுக்கு இதன் மூலமாக நல்லது நடந்தால் அதை ஆதரிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக, ஊழல் குறித்து கண்மூடித்தனமாக எதிர்க்காமல், உண்மையான குற்றச்சாட்டுகளை வைத்துப் பேசினால், மக்கள் அதை விரும்புகிறார்கள். புகார் சொல்ல வேண்டும் என்பதற்காக எல்லாவற்றிலும் எதிர்த்துக் கொண்டிருந்தால் மக்களுக்கு போர் அடித்து 'இந்தப் பழம் புளிக்கும்' என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.

கேள்வி: தமிழ்நாடு பாஜக ஒரு விஷயத்திற்காகப் போராடுகிறது, ஆனால் டெல்லிக்கு இந்த விஷயம் சென்று சேரவில்லையா? தமிழ்நாடு பாஜகவின் குரல் டெல்லி வரை எதிரொலிக்கவில்லையே?
இந்தி பிரச்சனையை பொறுத்தவரை பாஜக தெளிவாக தங்கள் நிலைப்பாட்டைச் சொல்கிறது. யாருமே இந்தியை திணிக்க நாங்கள் அனுமதிக்கப்போவது கிடையாது. காசி தமிழ்ச் சங்கம் தொடங்கி, நாடாளுமன்றத்தில் செங்கோல், திருக்குறள் என எத்தனையோ இடங்களில் பாஜகவின் பங்களிப்பு இருக்கிறது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் குரலை எழுப்பி வருகிறோம். கட்சியாக நாங்கள் முன்வைக்கும் விஷயங்கள் பாஜக அரசின் பாலிசியாக மாறுவதை கண்கூடாக மாறுகிறது.
இந்தியா போன்ற சிக்கலான ஒரு கூட்டாட்சி நாட்டில் ஒரு மத்திய அரசாக இயங்கும்போது சில எல்லைகள் வந்துவிடுகின்றன. ஒரு மாநில கட்சி பேசுவது போல மத்தியில் ஆளும் தேசியக் கட்சி பேச முடியாது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்தி மொழி நாளில் பேசினார். அதையே இன்று அமித் ஷா பேசும்போது ஸ்டாலின் எதிர்க்கிறார். இதனை மக்களிடம் தெளிவுபடுத்துகிறோம்.
ஒரு கட்சி தீவிரமாக மாநில அரசியலை முன்னெடுத்தால் அது தவறாகப் போய்விடும். உதாரணமாக பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது. பாஜகவில் கட்சியாக இருக்கிறது. காவிரி பிரச்சனை வரும்போது இரு மாநில தலைவர்களும் மேலிடத்திற்கு கொண்டு செல்கிறோம். தமிழ்நாடு பாஜக, அணையை கட்டக்கூடாது என்கிறது. கர்நாடகா பாஜக அணையை கட்ட வேண்டும் என்கிறது. ஆனால், மாநில அரசுகள் அனுமதி இன்றி அணை கட்டமுடியாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி, மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் கூட, அந்தந்த மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க முடியும் என்பதை பாஜக காட்ட ஆரம்பித்திருக்கிறது. உதாரணத்திற்கு மகாராஷ்டிரா கர்நாடகா இடையேயான பெல்காம் விவகாரம். இதுபோன்ற தீர்க்கப்படாத பிரச்சனைகளை இரு மாநில மக்களின் மனம் கோணாமல் மத்திய பாஜக அரசு தீர்க்கப் பார்க்கிறது. இதனை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோம்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடைசி 3 ஆண்டுகளில் முதலில் சொன்ன கட்சி பாஜக. கடந்த ஒரு வருடமாகத்தான் திமுக சொல்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை குழுவாகச் சென்று பார்த்து கடிதம் அளித்தோம். இதுவே இந்தியாவில் முதல் முறை. அரசின் நிலைப்பாடு வேறொன்றாக இருக்கும் நிலையில், அதே கட்சி சார்பில் மாநிலத்தின் உரிமையை முன்னிலைப்படுத்துகிறோம்.
ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் தேசியத்திற்கே முன்னிலை. குற்றவாளிகள் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அப்படி நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு. உணர்ச்சி ரீதியாக கட்சிகள் பேசுவதை ஏற்கக்கூடாது, சட்டப்படியே நடக்க வேண்டும் என்கிறோம். அதேசமயம், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். எல்லா விஷயங்களிலும் தமிழ்நாடு பாஜகவின் முதல் விருப்பம் தமிழ்நாடுதான், அதை தேசியம் என்ற ஃப்ரேமுக்குள் இயங்குகிறோம் என்ற மெசேஜை தான் சொல்கிறோம்.
கேள்வி: ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்கிறீர்கள். இன்னொரு பக்கம், ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக அமித் ஷா பேசுகிறார். ஜெயலலிதாவை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
அண்ணாமலை: ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று நான் சொன்னதில்லை. தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து வருகிறது. அது மாற வேண்டும் என்றால் இந்த அரசியல் கட்டமைப்பே மாறவேண்டும். தமிழ்நாடு அரசியலின் பாதையை மாற்றியதில் முக்கியமான பங்கு ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. வலிமையாக ஒரு பெண் அரசியலில் கோலோச்ச முடியும் என ஜெயலலிதா காட்டியிருக்கிறார். எல்லாவற்றிலும் மேலாக தமிழ்நாடு விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் தேசிய விருப்பத்தை முன்னிலைப்படுத்தியவர்.
அரசியலை பொறுத்தவரை நாம் பேசுவது எல்லாமே கம்பி மேல் நடப்பது போல. இதுவரை தமிழ்நாட்டு மக்களின் மைண்ட் செட் என்ன? ஊழலை சொல்லி தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க முடியாது என்ற நிலை உள்ளது. நாம் இன்று ஊழல் குற்றச்சாட்டை மையப்படுத்தி அரசியலை முன்வைக்கிறோம். மக்கள் நிறைய இடங்களில் ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள். ஏனென்றால் அவர் அதைவிட பணிகளைச் செய்வதில் திறமையானவராக இருக்கிறார்.
அதை பாஜக உடைக்க வேண்டுமென்றால் அதைவிட ஒரு கட்டம் தாண்ட வேண்டும். எனது வேட்பாளர் திறமையானவர், ஊழல்வாதியும் இல்லை என்றால் மக்களின் ஓட்டை பெற முடியும். அதற்கு இப்போது சின்ன விதையை போட்டிருக்கிறோம். ஒரு விவாதத்தை எழுப்பியுள்ளோம். அரசியல் பல நேரங்களில் கறுப்பு - வெள்ளையாக இயங்குவது இல்லை. இவர் ஊழல்வாதியாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் 6 மணிக்கு வீட்டுக்குப் போனாலும் இவரைப் பார்க்கலாம் என்ற பார்வை இருக்கிறது. ஊழல் எதிர்ப்பை ஓட்டாக மாற்றுவதற்கு இன்னும் ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டும்.
2014 தேர்தலில் திமுக படுதோல்வி அடையக் காரணம் 2ஜி ஊழல் விவகாரம் தான். அந்த தேர்தலில் 23 சதவீதத்திற்குள் தான் திமுக வாக்குகள் பெற்றது. இழந்த வாக்குகளின் சரிவை மீண்டும் ஈடுகட்ட முடியாமல் தான் 2016 சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியடைந்தது. 10 வருட ஆட்சிக்கு எதிர்ப்பலை இருந்தும் 2021 தேர்தலில் வெறும் ஒன்றரை சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றுள்ளது திமுக. இன்னும் திமுக மீதான ஊழல் கறையால் 5 சதவீதம் வாக்குகள் சரிந்திருக்கின்றன.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications