பாஜக அணிக்கு விழுந்த அடி.. விக்கிரவாண்டி ரிசல்ட் பற்றி அண்ணாமலை சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை எதிரொலிப்பது இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியுற்ற நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி அன்புமணி தோல்வியைத் தழுவி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.

அண்ணாமலை பேட்டி: இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இடைத்தேர்தல் முடிவு குறித்துப் பேசிய அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும், அதுகுறித்து ஆராய்ந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகிறேன். நாளை அல்லது நாளை மறுநாள் இதுகுறித்து தீர்க்கமாகப் பேசுகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான்.
இடைத்தேர்தலில் தொடர்ந்து ஆளுங்கட்சிதான் ஜெயிக்கிறது. அதன்பிறகு, நடந்த தேர்தல்களில் முழுமையாக முடிவுகள் மாறியிருக்கிறது. இதை பலமுறை பார்த்திருக்கிறோம். இந்த முறையும் அப்படித்தான் முடிவுகள் வந்திருக்கிறது. குறிப்பாக இடைத்தேர்தலில், நிறைய அமைச்சர்கள் ஒவ்வொரு இடத்திலும் சென்று வேலை பார்க்கின்றனர். அத்துமீறல்கள், முறைகேடுகள் எல்லாம் இப்போது இடைத்தேர்தல்களில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் மனநிலை அல்ல: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் போல இந்த தேர்தல் நடக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். ஆனால், பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இடைத்தேர்தலின் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு. காரணம் இதற்கு முன்பும் அதுபோல இருந்தது இல்லை. இப்போதும் அப்படி இருக்கப்போவதில்லை.
எனினும், மக்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இணைந்து கடுமையாக களப்பணி ஆற்றினர். வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அரசின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் தாண்டி இத்தனை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுவும் ஒரு சாதனைதான்.
2026ல் திமுக ஆட்சியை இழக்கும்: இதற்குமுன்பு தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளன. எனவே, இந்த தேர்தல் முடிவை முன்னோட்டமாக எடுத்துக் கொண்டால், நிச்சயமாக இந்த ஆட்சி 2026 தேர்தலில் ஆட்சியை இழக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS!












Click it and Unblock the Notifications