"சங்கத்தமிழன் கிட்ட சொல்லிட்டேன்.." டக்கென ஆப் செய்த திருமாவளவன்.. மீண்டும் விடாத கமலாலயம்

திருமாவளவன் ட்வீட் போட்டு விசிகவினரை அமைதிப்படுத்தி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திருமாவளவனுக்கு பாஜக சார்பாக இந்துத்துவ அம்பேத்கர் உள்ளிட்ட 4 புத்தகங்களை அன்போடு பரிசளிப்பதற்காக அலுவலகத்திலேயே வைத்துள்ளேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இளையராஜா விவகாரத்தில் திருமாவளவன் பேசும்போது, இளையராஜா போன்றோரை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம்... இளையராஜா பாவம்" என்று கூறியிருந்தார்.

திருமா இப்படி பேசியிருந்தது வழக்கம்போல் பாஜகவுக்கு டென்ஷனை ஏற்படுத்திய நிலையில், இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இளையராஜா

இளையராஜா

"இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது? ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா? நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன். அருந்ததியர் சமூகத்தில் மிகப்பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜக பின்பற்றுவதால்தான் பாஜகவில் இணைந்தார்" என்று சவால் விட்டிருந்தார்.

திருமா தந்த பதில்

திருமா தந்த பதில்

இந்த சவாலுக்கு திருமாவளவனும் பதில் சொல்லி இருந்தார்.. "பெரியார், அம்பேத்கர் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான் என்றபோது மோடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

விசிக திருமாவளவன்

விசிக திருமாவளவன்

இதற்கு நடுவில் விசிகவின் பொதுச்செயலாளர் வன்னியரசும், "புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம். கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா?" என்று அண்ணாமலையிடம் கேள்வி கேட்டிருந்தார்.. இதற்கு நடுவில், விசிகவின் முக்கிய நிர்வாகி சங்கத்தமிழனோ ஒரு படி மேலே போய் அண்ணாமலைக்கு போனை போட்டு நேரடியாகவே பேசி, நேரில் விவாதிக்க நேரம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

அம்பேத்கர்

அம்பேத்கர்

அதற்கு அண்ணாமலையோ, '' நான் ஏற்கெனவே அம்பேத்கரின் புத்தகத்தை படித்திருக்கிறேன்.. 24ம் தேதி பிஸியாக இருக்கிறேன்.. 26ம் தேதி நேரில் சந்திக்கலாம்" என்று சொல்லியிருந்தார்.. அதாவது இன்றைய தேதிக்குதான் அண்ணாமலை டைம் கொடுத்திருந்தார்.. ஆனால், இன்று காலையிலேயே, திருமாவளவன் அதிரடியாக ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார்.

திருமாவளவன் ட்வீட்

திருமாவளவன் ட்வீட்

அதில், "பாஜக தமிழகத் தலைவருக்கு அம்பேத்கரின் இந்துத்துவத்தின் புதிர்கள் எனும் புத்தகத்தை வழங்கிட பாஜக அலுவலகத்திற்குச் செல்வதைத் தவிர்க்கும்படி இளஞ்சிறுத்தைகள் மாநில செயலாளர் சங்கத்தமிழனிடம் சொல்லி உள்ளேன்.. அதனால், இளஞ்சிறுத்தைகள் அங்கே செல்வதைத் தவிர்க்கவும்" என்று ட்வீட்டில் தெரிவித்திருந்தார். இதை பார்த்த அண்ணாமலை உடனே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டார்.

திருமா விளக்கம்

திருமா விளக்கம்

அதில், "அண்ணன் தொல். திருமாவளவனுக்கு பாஜக சார்பாக மனு வாதமும் - ஆர்எஸ்எஸ்-ம் விஜயபாரதம் பதிப்பகம், இந்துத்துவா அம்பேத்கர் - ம.வெங்கடேசன், சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் - தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் ஆகிய 4 புத்தகங்களை அன்போடு பரிசளிப்பதற்காக அலுவலகத்திலேயே வைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்...

திருமாவளவன்

திருமாவளவன்

ஆக மொத்தம், நாள் குறித்து, அப்பாயின்மென்ட் கேட்டு, இவர்கள் இரு தரப்பிலும் எப்போது விவாதங்கள் நேரடியாக நடத்தப்படும் என்று கடந்த ஒரு வாரமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அப்படி ஒரு விவாதமே நடத்தப்படவில்லை என்பது தெளிவாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, தேவையில்லாத பிரச்சனைகள், மோதல்கள், பிரிவினைகள், வன்முறைகள், எழுந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்து, இப்படியான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத மூத்த தலைவர் தொல்.திருமாவளவன்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+