யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் பிரச்சாரம் சூடுபிடித்து வரும்நிலையில், பாஜக தரப்பினர் படு மும்முரமாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றுள்ளது.. இதில் நிறைய இடங்களிலும் வேட்பாளர்கள் அளித்துள்ள தகவல்களில் மாற்றுக்கருத்து இருக்கிறதாம்.

Annamalai slams DMK Government and Did arjun sampath give rs500 to Old woman in Coimbatore campaign

எனவே, எதிர் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சில வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பரிசீலனை: கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை, திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் என மொத்தம் 59 பேர், வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இவர்களது வேட்பு மனுக்கள் இன்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.. அப்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவில் உறுதிமொழி படிவம் 26ல், பாகம் B-யில் அவருக்கு எங்கு ஓட்டு இருக்கிறதோ, அந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதியின் விவரங்களை முழுமையாக படிவத்தில் குறிப்பிடப்படவில்லையாம்.. இதற்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு கூறினார்கள்...

வாக்குவாதம்: போட்டியிடும் தொகுதியை மட்டும் குறிப்பிட்டு விட்டு, தன்னுடைய வாக்குரிமை, கரூர் மாவட்டத்தில் உள்ள எந்த சட்டப்பேரவை என்பது குறிப்பிடப்படவில்லை என்று விதிமுறைகளை சுட்டிக்காட்டி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்கள். பிறகு, அவரது வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.. இந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு இன்று கோவையில் ஏற்பட்டுவிட்டது.

அதேபோல, இன்னொரு பரபரப்பும் இதே கோவையில் நடந்துள்ளது.. அதாவது சில நாட்களுக்கு முன்பு, அண்ணாமலை செய்தியாளர்களிடம், கோவை தொகுதியில் போட்டியிடுவதை பற்றி அறிவித்ததுடன், திமுகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக, மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கும், பரிசு பொருட்களுக்கும் நிறைய வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

ஓட்டுக்கு பணம்: அதனால்தான் அண்ணாமலை செய்தியாளர்களிடம் , "கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டேன். பாஜக எதுவும் செலவு செய்யாது.. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும். ஆனால், தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்துதான் தொடங்க போகிறது" என்று திமுகவை டேமேஜ் செய்திருந்தார்.

அண்ணாமலை இப்படி உறுதி தந்திருந்தாலும், இந்த கருத்தை திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கிண்டல் செய்து விமர்சித்திருந்தார்கள்.,

கோயில்: இந்நிலையில் நேற்றைய தினம், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, கோவை கோனியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் அண்ணாமலை. அப்போது, 1989-ல் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் வீரகணேஷின் வயதான அம்மாவையும் பாஜகவினர் கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனர்.

அண்ணாமலைக்கு அந்த பாட்டி, மாலை அணிவித்தார்.. பிறகு, சால்வை எடுத்து அண்ணாமலைக்கு போர்த்தினார்.. தன் கையில் மடித்து வைத்திருந்த பொட்டலத்தை பிரித்து, அதிலிருந்து விபூதி எடுத்து, அண்ணாமலையின் நெற்றியில் பூசினார்.. இறுதியில், அண்ணாமலையும் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார்..

அண்ணாமலை: உடனே அண்ணாமலைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அர்ஜுன் சம்பத், டக்கென தன்னுடைய பாக்கெட்டுக்குள் கையைவிட்டு, ரூ.500 எடுத்து, பாட்டியிடம் நீட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பூசாரிக்கு காணிக்கை தருவதற்காக பணத்தை தந்தேன்.. ஆனால் பூசாரி அங்கிருந்து சென்றுவிட்டது அப்புறம்தான் தெரிந்தது. அதனால் அந்த பணத்தை நானே வைத்துக்கொண்டேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலைக்கு பாட்டி மாலை போட்டதுமே, பாக்கெட்டுக்குள் கையைவிட்டு 500 ரூபாய் பணத்தை அர்ஜுன் சம்பத் தயாராக கையில் வைத்துக் கொண்ட இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+