ஹிந்தி.. டெல்லி.. மத்திய அரசு வஞ்சிக்கிறது! இது மட்டும்தான் ஸ்டாலினுக்கு தெரியும்! அண்ணாமலை அட்டாக்!
திண்டுக்கல்: ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை பொம்மைக்கு கீ கொடுப்பது போல் கீ கொடுக்க வேண்டும்... நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சும்மா இருந்து பார் எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமா என்று கூறுவார்.. அதேபோல் ஸ்டாலின் ஐயா ஐந்து ஆண்டுகளாக சும்மா இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று நமக்கு தெரியும் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விடியல் சேகரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அவர்," ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை பொம்மைக்கு கீ கொடுப்பது போல் கீ கொடுக்க வேண்டும். ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு காலையில் 6 மணிக்கு வீட்டில் ஒரு கீ கொடுத்து விடுவார்கள் காலையிலிருந்து மதியம் வரைக்கும் டெல்லி டெல்லி டெல்லி.
மதியம் ஒருக்கா கீ கொடுத்தால் சாயந்திரம் வரைக்கும் ஹிந்தி ஹிந்தி ஹிந்தி ஹிந்தி ஹிந்தி.... சாயந்திரம் மறுபடியும் கீ கொடுத்தால் மத்திய அரசு வஞ்சிக்கிறது மத்திய அரசு வஞ்சிக்கிறது.. மறுபடியும் தூங்கச் சென்று விடுவார்.
மீண்டும் அடுத்த நாள் இதே போல் தான். இதைத் தவிர அவர் வேறு எதுவும் பேசியது கிடையாது. வடிவேலு அண்ணன் ஒரு படத்தில் சொல்லுவார் சும்மா இருந்து பார் எவ்வளவு கஷ்டம் தெரியுமா அதுபோல் ஸ்டாலின் ஐயா சும்மா இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்று நமக்குத் தெரியும். ஐந்து வருடம் எதுவும் செய்யாமல் தமிழகத்தை பாலடைந்து பின்னோக்கி எடுத்துச் சென்று தமிழகத்தின் வளர்ச்சி எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டு மக்களிடத்திலே வந்து எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 2021-22ல் சக்கரபாணி பொங்கல் தொகுப்பு கொடுத்தார். மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டை, மற்ற இடங்களில் எல்லாம் வெள்ளம் கெட்டியாக தான் இருக்கும். ஆனால் தமிழகத்தில் மட்டும் வெள்ளத்தை பக்கெட்டில் கொடுத்தார்கள். அந்த வெள்ளத்தை சப்ளை பன்னவர்தான் வேடசந்தூரில் வேட்பாளராக நிற்கும் திமுக வேட்பாளர் சாமிநாதன். அந்த சப்ளையர்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஊழல் செய்ததுதான் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் சக்கரபாணி.
பினாமி எல்லாம் பக்கத்து பக்கத்து தொகுதியில் நின்றால் எப்படி விளங்கும். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த போது ஒரு நபர் இவர்கள் மீது புகார் அளித்தார் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியதற்கு அந்த குடும்பத்தை டார்ச்சர் செய்து சின்னாபினமாக்கியதில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
மோடி அவர்கள் தமிழகத்திற்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு அரிசி அளிக்கிறார்கள் என்று தெரியுமா? டெல்லியில் இருந்து பஞ்சாப், சண்டிகர், உத்திரப்பிரதேசத்தில் இறந்த அரிசியை ரயில் மூலம் தமிழகத்திற்கு மட்டும் மாதந்தோறும் 2 லட்சம் டன் அரிசி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் 2023ல் மட்டுமே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்பட்ட அரிசியின் அளவு மட்டுமே 916 டன் அவ்வளவுதான் நாங்கள் பிடித்தோம். பிடித்தது மட்டுமே 916 டன். இங்கு இருப்பவர்கள் ரேஷன் கடையில் திருடுவதை மட்டுமே தங்களது கொள்கையாக வைத்துள்ளார்கள்.
பொங்கல் தொகுப்பு முறைகேடு சம்மந்தமாக சிபிஐ வழக்கு உள்ளது தேர்தல் முடிந்த பின்பு யாருக்கு என்ன ஆகும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்பறம் நான் சொல்லித்தான் ஜெயிலுக்கு போய்ட்டா நான்தான் எதாவது பண்ணிட்டானு சொல்வார்கள். 13 அமைச்சர்கள் புழல் சிறைக்கு செல்வார்கள். ஆனால் புழல் சிறையில் இருக்கும் கைதிகள் திமுக அமைச்சர்களை எங்களுடன் போடாதீர்கள் அவர்களை விட நாங்கள் மோசமானவர்களா என்று கேட்கிறார்கள்.
சக்கரபாணி இதோடு நிற்கவில்லை. ஒருபடி மேலே போய் நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் நெல் கிடங்கில் வைக்க வேண்டும். ஒரு லாரிக்கு 598 ரூபாய் ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டும் இவருடைய பினாமிகள் மூன்று பேர் 19 சின்ன லாரிகளை பிடித்து அதில் ஏற்றி டன்னுக்கு 186 ரூபாய் கொடுத்து 412 ரூபாய் டன்னுக்கு லாபம் பெறுகிறார்கள். இது சம்பந்தமாக லஞ்ச பதிப்பு துறையில் நான் புகார் அளித்துள்ளேன். இந்த ஊழல் மட்டுமே வருடத்திற்கு 160 கோடி ரூபாய் சேகரிக்கிறார்கள் ஐந்து வருடத்திற்கு 800 கோடி. அந்த காசைத்தான் ஒட்டன்சத்திரத்தில் தண்ணி மாதிரி செலவு செய்கிறார் சக்கரபாணி" என்றார்.














Click it and Unblock the Notifications