தேதி குறிச்சாச்சு! திடீர் ஆலோசனை நடத்தும் அண்ணாமலை.. நெக்ஸ்ட் மூவ் என்ன? பாஜகவின் மவுனம் கலையுமா?
சென்னை: பாஜக தலைமை அலுவலகத்தில் வரும் அக். 3ஆம் தேதி பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் அண்ணாமலை தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதிமுக பாஜக கூட்டணி முறிந்த நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியில் கட்சிகளை இணைப்பது பற்றியும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கூட்டணி முறிவு - பாஜக ஆலோசனை கூட்டம்: பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணியில் உள்ள இதர கட்சிகள் இந்த கூட்டணி தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்தக் கட்சிகளின் விருப்பம் தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது தொடர்பாகவும், 2024 லோக்சபா தேர்தலுக்கான அடுத்தகட்ட வியூகங்கள் தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை விவாதிக்கக் கூடும் என்றும் தெரிகிறது.
அதிமுகவின் கூட்டணி முறிவு முடிவு குறித்து இதுவரை பாஜக தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர். தேசிய தலைமை கூறும் வரை நாங்கள் எந்தக் கருத்தும் கூற முடியாது என கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அவர்களின் அமைதி கலையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடகம் இல்லை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னணி தலைவர்கள், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக, பாஜகவுடனான தங்கள் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.
இனி பாஜகவுடன் கூட்டணி இருக்காது: "ஏற்கெனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த, பாஜகவின் மாநிலத் தலைமை எங்கள் இயக்கத்தைப் பற்றியும், தலைவர்கள் பற்றியும் பல்வேறு விமர்சனங்கள் செய்த காரணத்தால், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஊடக விவாதங்களில், நேரம் வரும்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துவிடும் என்று கூறி மக்களை திசைத்திருப்ப முயற்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், அதிமுக ஒரு நாடகம் நடத்திக் கொண்டிருப்பதாகவும், நேரம் வரும்போது பாஜகவுடன் இணைந்து விடுவார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.
அண்ணாமலை சொன்ன பதில்: அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி ஏற்கெனவே அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம். இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக உறுதியாக கூட்டணியில் இருக்காது. " என்றார்.
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "பாஜக உடன் 2024 லோக்சபா தேர்தல் மட்டுமல்லாது, 2026 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இல்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி சொன்னது பற்றி எனக்கு தெரியாது. என் கவனம் முழுவதும் பாதயாத்திரையில் மட்டுமே உள்ளது. கே.பி.முன்சாமி பேட்டி அளித்தது குறித்து எனக்கு தெரியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தி இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
-
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications