இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது.. யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்: அண்ணாமலை
சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யக் கூடாது, இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக்கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றன. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்தால், திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்மையில் கூறி இருந்தார்.

இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 10ஆம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பேசினர். அப்போது தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், முதல்கட்டமாக 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகள் ஆகஸ்ட் 24 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோயம்புத்தூர் போன்ற அமைதியான நகரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 1998ஆம் ஆண்டு வெடிகுண்டு வெடித்ததில் 58 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் நிறுத்திவைத்தது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கொடூரமான செயல் என்று மீண்டும் வலியுறுத்தியது.
இந்த நிலையில் இதையெல்லாம் மீறி, தமிழக சட்டசபையில், கோவை குண்டுவெடிப்பு மற்றும் பிற கொடூரமான செயல்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பயங்கரவாதிகளை விடுதலை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறுபான்மையினரை திருப்தி செய்ய இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தால் காயம் இன்னும் ஆறாத நிலையில், கடந்த அக்டோபரில், மீண்டும் கோவையை உலுக்கிய தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம், இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 13 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது.
இன்னும் தீவிரவாதம் ஓயவில்லை. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்" என அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதை, நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு வண்ணம் கிடையாது. தீவிரவாதத்தை ஒரு சமுதாயத்துக்குள், சாதிக்குள், மதத்துக்குள் அடைக்க வேண்டாம். கோவை குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை வெளியில் விடக் கூடாது.
தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்தான். இன்னும் அங்கு தீவிரவாதம் ஒழியவில்லை, அப்படியே இருக்கிறது. எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளா என்றால் அது கிடையாது. மேலும், இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக்கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன்" எனத் தெரிவித்தார்.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!












Click it and Unblock the Notifications