அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை.. பாஜக டாட்டா காட்டிவிட்டது.. பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பாக அண்ணாமலைக்கு தேர்தலில் சீட் கொடுக்காத நிலையில், அவர் இனி மாநில அரசியலில் இல்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி உயர அண்ணாமலை ஒரு காரணம் என்று கூறிய தராசு ஷ்யாம், அண்ணாமலைக்கு பாஜக டாட்டா காட்டிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதிக்கும், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதிக்கும் மாறி இருக்கின்றனர்.

Annamalai

வாசுதேவநல்லூரில் ஆனந்தன் அய்யாசாமி, ராதாபுரத்தில் எஸ்பி பாலகிருஷ்ணன், மயிலாப்பூரில் தமிழிசை செளந்தரராஜன், விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், 27 தொகுதிகளை போராடி பெற்ற பாஜக, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட கால தாமதம் செய்துள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில் பெரிய ஆச்சரியம் இல்லை.

எம்.ஆர்.காந்திக்கு மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு இடமில்லை. இதன் மூலமாக அண்ணாமலை இனி மாநில அரசியலில் இல்லை என்றே புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 4,5 ஆண்டுகளாக திமுகவுக்கு எதிராக பணியில் இருந்தார். அண்ணாமலைக்கு ஆதரவாக இளைஞர்கள் பட்டாளம் உருவாகியது.

பாஜக வாக்கு வங்கி உயர அண்ணாமலை ஒரு காரணம். சித்தாந்த அடிப்படையில் வாக்கு வங்கி அவருக்கு இல்லை. அண்ணாமலை என்ற நட்சத்திரத்திற்கு வாக்கு வங்கி உள்ளது. இன்ஸ்டாகிராம் அடிமைகள் பலரும் அண்ணாமலை ஆதரவாளர்கள். இப்படியொரு டிரெண்டை தமிழக அரசியலில் புகுத்தியதே அண்ணாமலை தான். அவருக்கு பாஜக தலைமை டாட்டா காட்டிவிட்டது.

அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும் இது ஏமாற்றம் தான். பாஜகவில் பெரியளவில் வெற்றிக்கான பலம் இல்லை. மயிலாப்பூரில் தமிழிசைக்கு பலமே கிடையாது. நயினார் நாகேந்திரனுக்கும் நெல்லையில் தான் பலம். சாத்தூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. இதனை சமாளிக்க உள்ளூர் அரசியல்வாதி தான் தேவை. அந்த இடத்தில் நயினார் நாகேந்திரன் ஃபிட்டாக மாட்டார்.

காந்தியை தவிர்த்து பெரும்பாலான பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அதிமுகவை நம்பியே ஏராளமானவர்கள் களமிறங்கி இருக்கின்றனர். எடப்பாடியும் பாஜக வெல்ல கூடாது என்றே நினைப்பார் என்று கருதுகிறேன். விஜயதரணிக்கு வெற்றி வாய்ப்பு கடினம் தான். மீனவ சமுதாய அமைப்புகள் அதிகளவில் அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள்.

விஜயதரணிக்கு குடும்ப பின்னணி ஒரு மரியாதையை பெற்றுக் கொடுத்தது. ஆனால் பாஜகவுக்கு சென்ற பின், விஜயதரணிக்கு அந்த ஆதரவு இல்லை. அதேபோல் அண்ணாமலைக்காக வேட்பாளர் பட்டியல் தாமதம் என்று நான் கருதவில்லை. நாடாளுமன்றக் குழு ஒப்புதலுக்காக தாமதமாகி இருந்திருக்கிறோம். அதுதான் காங்கிரஸ் கட்சியிலும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+