அண்ணா.. அண்ணா.. என அண்ணாமலையை பார்த்ததும் கார் கதவை தட்டிய பள்ளி மாணவன்.. கடைசியில் இன்ப அதிர்ச்சி
சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் கருப்பு நிற காரில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்த்த பள்ளி மாணவன், ‛‛அண்ணா.. அண்ணா..'' எனக்கூறி கார் கதவை தட்டியதை கவனித்த அண்ணாமலை, அந்த சிறுவனுக்கு இன்பஅதிர்ச்சி ஒன்றை கொடுத்தார்.
தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. இவர் நேற்று சென்னையில் கருப்பு நிற காரில் பயணித்து கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார். முன்வரிசையில் உள்ள சீட்டில் அண்ணாமலையின் பாதுகாவலர் அமர்ந்திருந்தார்.

அண்ணாமலை காரின் பின்னால் அமர்ந்து பயணித்து கொண்டிருந்தார். அந்த கார் சென்னை ஈஞ்சம்பாக்கம் சிக்னலை அடைந்தது. அங்கு கார் மெதுவாக சென்று கொண்டிருந்தது. காரின் கண்ணாடி மூடப்பட்டு இருந்தது.
இருப்பினும் கூட அந்த சாலையில் பள்ளி மாணவன் காரில் பயணித்த அண்ணாமலையை அடையாளம் கண்டார். கையில் லஞ்ச் பேக், தோளின் மீது ஸ்கூல் பேக் சுமந்து கொண்டு சீருடையுடன் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவன், மெதுவாக சென்ற காரின் உள்ளே அண்ணாமலை இருப்பதை அறிந்து கொண்டார்.
உடனடியாக அந்த சிறுவன், ‛‛அண்ணா.. அண்ணா..'' என்று காரின் அருகே சென்று கதவை தட்டினார். ஆனால் கார் சட்டென்று முன்னோக்கி சென்றது. இதனால் மாணவன் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில் அடுத்த நொடியே கார் நின்றது. மாணவன் ஆர்வத்துடன் காரை நோக்கி ஓடினார்.
அப்போது காரின் கண்ணாடியை திறந்த அண்ணாமலை, மாணவனிடம், ‛‛நல்லா இருக்கீங்களா?'' என்று கேட்டு கைகொடுத்தார். அதுமட்டுமின்றி காரில் வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து மாணவனுக்கு வழங்கினார். அதனை மாணவன் பெற்று கொண்டான். இதையடுத்து மாணவனுடன் வந்திருந்தவரிடம், ‛‛பார்த்து கூட்டி செல்லுங்கள் அண்ணா'' என சொல்லிவிட்டு சென்றார்.
இந்த வேளையில் இன்னொரு இளைஞர், அண்ணாமலையுடன் ‛செல்பி' எடுக்க முயன்றார். அப்போது அண்ணாமலை, ‛‛அண்ணா டிராபிக் அண்ணா.. கை கொடுத்து கொள்வோம்..'' எனக்கூறி கைக்குலுக்கிவிட்டு சென்றார். இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்தவர் செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications