அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்
சென்னை: தமிழக அரசியலில் அண்ணாமலையின் வருகைக்கு பிறகு பாஜக, ஒரு புதிய வேகத்தைப் பெற்றதாக ஒரு தரப்பினர் கருதி வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்கள் உச்சக்கட்ட பூசல்களாகவே மாற தொடங்கியுள்ளன. அதுவும் திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள், கட்சியின் தேசிய மற்றும் மாநிலத் தலைமைக்கு எதிராகத் தொடுத்துள்ள சமூக வலைதளப் போர், அக்கட்சியின் உள்முகக் கட்டமைப்பில் உள்ள விரிசல்களைப் பறைசாற்றுகிறது. இதன் தாக்கம் என்ன???
இது வெறும் தனிநபர் மோதல் என்பதைத் தாண்டி, கட்சியின் டெல்லி தலைமைக்கும் தமிழக அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்பில் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது.

கடந்த ஒரு வார காலமாகவே, சோஷியல் மீடியாவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் எழுப்பும் முக்கியக் குற்றச்சாட்டு என்னவென்றால், உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்பதாகும்.
அண்ணாமலை - டெல்லி மேலிடம்
கட்சியின் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு, கட்சியை பரவலாக அடையாளப்படுத்திய அண்ணாமலைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதே இவர்களின் ஆதங்கமாக உள்ளது..
மாநிலங்களவை உறுப்பினர் பதவியோ அல்லது அவர் விரும்பும் தொகுதியோ வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது, அண்ணாமலையை அரசியலில் இருந்தே ஓரங்கட்டும் திட்டமிட்ட சதி என்றும் இவர்கள் கருதுகிறார்களாம்.. அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சர் எல்.முருகன் போன்றவர்களுக்கு தேசிய தலைமை அளிக்கும் முக்கியத்துவம், அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாம்.
பாஜக உட்கட்சி பூசல்
அதாவது களப்பணியை விட மேலிட நெருக்கமே பதவிகளை தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவர்கள் மத்தியில் அழுத்தமாக வேரூன்றிவிட்டதாகவே தெரிகிது..
எனவே இப்படிப்பட்ட சூழலில், அண்ணாமலை இப்போதைய சூழலிலிருந்து விடுபட்டுத் தனித்துப் பயணிக்க வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றன.
"சீட் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டிய தலைவர், இன்று ஒரு சீட்டுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்" என்ற அவர்களின் ஆதங்கம், ஒரு தலைமை பண்புள்ள நபரை கட்சி நிர்வாகம் கையாண்ட விதத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டுவதாக தெரிகிது..
அமித் ஷா போன்ற தேசியத் தலைவர்களின் தேர்தல் வியூகங்களையும், அரசியல் சாணக்கியத்தனத்தையும் கேள்விக்குள்ளாக்கும் அளவிற்கு, அண்ணாமலை தொண்டர்களின் கோபம் எல்லை மீறியிருக்கிறதாம்.. இது வரவிருக்கும் தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை பெருமளவில் பாதிக்கும் காரணியாக அமையக்கூடும் என்றும் வருத்தத்துடன் சொல்கிறார்கள் ஆதரவாளர்கள்.
ஆடிப் போன டெல்லி
இதுஒருபுறமிருந்தாலும், இந்த விவகாரத்தையே வேறு கோணத்திலும் நாம் அலச வேண்டியிருக்கிறது.. ஒரு தேசியக் கட்சி மாநில அளவில் வளரும்போது இத்தகைய அதிகாரப் போட்டிகள் ஏற்படுவது இயல்புதான், ஆனாலும், அதுவே பொதுவெளியில் விமர்சனமாக மாறுவது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்.
அண்ணாமலையை போன்ற ஒரு தனிநபர் பிம்பத்தை முன்னிறுத்தி செயல்பட்ட கட்சி, இப்போது அந்த பிம்பத்தாலேயே உள்வாங்கி சிதையும் அபாயத்தில் உள்ளது. ஒரு தலைவரை வளர்த்துவிட்டு, பிறகு அவரை சமன்படுத்த நினைக்கும் மேலிடத்தின் தந்திரம், தமிழகத்தை பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
உடைகிறதா பிம்ப அரசியல்?
தேர்தல் கிட்ட நெருங்கிவிட்டது.. அதனால் தமிழக பாஜக இந்த உட்கட்சிப் பூசலை உடனடியாக சரி செய்ய வேண்டியிருக்கிறது.. இல்லாவிட்டால் அது வரும் தேர்தலில் பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தலாம்.
அண்ணாமலையின் ஆதரவாளர்களைச் சமாதானப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தகுதியானவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதை டெல்லி தலைமை உறுதிப்படுத்த வேண்டும்.
எப்போதுமே, பிம்ப அரசியல் ஒரு எல்லை வரை உதவும், ஆனால் கட்சிக்குள் நிலவும் அதிருப்தி அந்த பிம்பத்தையே சிதைத்துவிடும் என்பதையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications