கொரோனா சிகிச்சை முடிந்து திரும்பிய அண்ணாநகர் டிசிபி முத்துசாமி.. குடியிருப்புவாசிகள் உற்சாக வரவேற்பு
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய, சென்னை, அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் முத்துசாமிக்கு அவர் குடியிருக்க கூடிய அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய போலீசார், மருத்துவ பணியில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

காவலர் நிலையிலுள்ள போலீஸ்காரர்கள் பாதிக்கப்படுவதோடு, அண்ணாநகர் காவல் துறை துணை ஆணையர் முத்துசாமியும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கோயம்பேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இந்த சிகிச்சையின் விளைவாக முழுமையாக குணமடைந்து துணை கமிஷனர் முத்துசாமி வீடு திரும்பியுள்ளார். அவர் வீடு திரும்பியபோது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கக்கூடிய பிற குடியிருப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி உற்சாகமாக அவரை வரவேற்றனர். இதனால் துணை கமிஷனர் முத்துசாமி நெகிழ்ந்து போனார். இந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications
