அண்ணாநகர் மநீமா வேட்பாளர் பொன்ராஜூக்கு கொரோனா - ஆன்லைனில் பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பொன்ராமுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை: அண்ணா நகர் சட்டசபைத் தொகுதியில் மநீம கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள பொன்ராமுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பொன் ராம், நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களும் வீதி வீதியாக வாக்காளர்களுடன் செல்கின்றனர்.
வேட்பாளர்களும் வாக்காளர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ்பாபு கடந்த வாரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட சந்தோஷ் பாபு ஆன்லைன் மூலம் பிரச்சாரம் செய்து வந்தார்.

கிங்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் சந்தோஷ் பாபு. தற்போது அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் மநீம வேட்பாளர் பொன்ராமிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பொன்ராம்.அன்பு நண்பர்களே, நான் கடந்த 4 நாட்களாக, தொடர்ந்து தூக்கமில்லாத இரவுகளால், தேர்தல் பணிகளால் உடல்நலம் சரி இல்லாமல் காய்ச்சலுக்கும், உடம்பு வலிக்கும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன். எனக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த இக்கட்டான தேர்தல் நேரத்தில் குறுகிய காலத்தில், நான் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில் அண்ணா நகர் தொகுதி மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால் களத்தில் மக்கள் நீதி மையத்தின் படைவீரர்கள் அண்ணா நகர் தொகுதி முழுக்க உங்கள் வீடு தேடி வந்து உங்களை சந்திப்பார்கள். அவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றி.
நான் நேரடியாக வர முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன் கூடிய சீக்கிரம் குணமடைந்து தேர்தலுக்கு முன்பாக உங்களை வந்து கண்டிப்பாக சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு நான் வர இயலாத சூழ்நிலையை பொறுத்தருள வேண்டுகிறேன்.
ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியா, டிவி, YouTube மூலம் தமிழக மக்களை சந்திப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
-
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்












Click it and Unblock the Notifications