பாஜக தலைவர்களையும் விடாத கிஷோர் கே சாமி.. ரோகினி கொந்தளிப்பு.. ரகுவரனை அசிங்கப்படுத்தியதால் புகார்
கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது
சென்னை: 2014ம் ஆண்டு வெளியிட்ட அவதூறான கருத்துக்களுக்காக கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி போலீஸில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைப் பற்றியும், பாஜக தலைவர்களை தவறாக சித்தரித்தும், நடிகர் ரகுவரன் பற்றியும் கிஷோர் கே.சாமி மோசமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்..
இந்த இழிவான கருத்தை பதிவிட்டதற்காக நடிகை ரோகினி சென்னை கமிஷனர் ஆபீசில் ஒரு புகார் மனு தந்துள்ளார்.. ரோகினியை அப்படி என்ன அவதூறு சொன்னார் கிஷோர் கே சாமி?

சேனல்கள்
3 நாட்களாகவே யூடியூப்பர்கள் 3 பேர் கைதாகி உள்ளனர்.. இந்த 3 பேருமே வீம்பு பிடித்தவர்கள்.. 3 பேருமே மலிவான முறையில் கருத்துக்களை பதிவிட்டு, அதன்மூலம் ஃபேமஸ் ஆக துடித்தவர்கள்.. 3 பேருமே பிரபலங்களை குறி வைத்தே, தங்கள் யூடியூப் சேனல்களை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருப்பவர்கள்.

ரோகினி
இதில் கிஷோர் கே சாமி மீது, இந்த 3 நாளில் மட்டும் 3 கேஸ்கள் பதிவாகி உள்ளன.. இன்று காலை நடிகை ரோகிணி ஒரு புகார் தந்துள்ளார்.. வழக்கமாக பெண் பத்திரிகையாளர்கள், அல்லது அரசியல் கட்சி சார்புள்ளவர்கள்தான் கிஷோர் மீது புகார்களை தருவார்கள்.. ஆனால், ரோகினி புகார் தந்ததும் ஒருவித பரபரப்பு மொத்த அரசியல், சினிமா உலகையும் கவ்விக் கொண்டுள்ளது.

சீனியர் பாஜக
சீனியர் பாஜக தலைவருடன் ரோகினியை இணைத்து 2014ம் ஆண்டு ஆபாசமாக பதிவிட்டுள்ளார் கிஷோர். அதேபோல, ரகுவரன் பற்றி இழிவாக பதிவிட்டுள்ளார்.. மிகவும் அருவறுப்பான கருத்துக்களை சொல்லி விமர்சித்துள்ளார்.. இதைப் பற்றிதான் தற்போது ரோகினி புகார் கொடுத்துள்ளார்.

ட்வீட்
அந்த ட்வீட்டில் உள்ள சில வரிகள் இவைதான்: "அதெல்லாம் சரி, செல்வி ஜெயலலிதாவின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும், கருணாநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசி வரும் பாரதீய ஜனதாவினர்.. அந்த மூத்த பாஜக தலைவரின் லீலைகளை பற்றி எதிர்தரப்பினர் பேசக் கிளம்பினால் என்ன செய்வார்கள்?

டி.நகர்
அந்த மூத்த பாஜக திருமணமாகாதவர் (தன் அண்ணன் குடும்பத்தின் பெயர் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்துள்ளார்).. ஆனால், அவர் அடிக்கடி சென்னை டி.நகரில் இருக்கும் ஒரு அடிக்குமாடி குடியிருப்புக்கு வருவது வழக்கம்.. அங்கே இருக்கும் தம்பதி இவருக்கு மிகவும் நெருக்கம்.. எந்த அளவுக்கு நெருக்கம் என்றால், அவரது காரில் முன்னே இல கணேசனுடன் அந்த பெண்மணி அமர்ந்திருக்க அவரது கணவர் பின்சீட்டில்தான் அமருவார்.
அதுமட்டுமில்லை.. அந்த மூத்த பாஜக தலைவரின் தொடர்பால் சீரழிந்த குடும்பம் தான் நடிகர் ரகுவரனின் குடும்பம் என்பதும் தனிக்கதை.. என்று கூறியதோடு மேலும் நான்கு முக்கிய பாஜக தலைவர்களின் பெயர்களையும் இணைத்து அவர் போட்டிருந்தார். இதுதான் தற்போது ரோகினியால் புகார் கூறப்பட்டுள்ளது.

பாஜக
ரோகினியை பொறுத்தவரை, பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்.. மக்களுக்கு எதிரான திட்டங்கள், அறிவிப்புகளை பாஜக செயல்படுத்தினால், அதற்கு தன்னுடைய கண்டனத்தை துணிச்சலாக பதிவிடுபவர்.

பிரதமர் மோடி
"பாஜகவுக்குப் பாடம் புகட்ட இந்த தேர்தலே நமக்குக் கிடைத்த வாய்ப்பு.. அதனால், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே பாஜகவை எதிர்ப்பதாக இருக்கும்... தவறுகளைக் கண்டிப்பதில் மட்டுமல்ல, மவுனமாக இருப்பதும் குற்றம்தான்" என்று தில்லாக சொன்னவர்.. அவ்வளவு ஏன்? "மக்களை வதைத்து விட்டு மீனாட்சியை கும்பிட்டால் போதுமா?" என்று பிரதமர் மோடியை கேள்வி கேட்டவர்.

கமிஷனர்
இப்படி இருக்கும்போது, பாஜக மூத்த தலைவர் ஒருவரையே இணைத்து கிஷோர் கே சாமி பதிவிட்டதுதான் ஜீரணிக்க முடியாது.. இன்று ரோகினி கமிஷனரிடம் அளித்த புகாரானது, அடுத்த ஒருசில நிமிடங்களிலேயே கீழ்ப்பாக்கம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அதனால், இந்த வழக்கிலும் சாமிக்கு ஜெயில்தான் போல தெரிகிறது.

விமர்சனம்
திமுகவை விமர்சித்த கிஷோர் கே.சுவாமியை கைது செய்ததைப்போல பிரதமர் மோடியை விமர்சிப்பவர்களும் கைது செய்யப்படுவார்களா? என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.. அதேபோல, எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் திமுகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று முட்டுக்கொடுத்து பேசினார் காயத்ரி ரகுராம். இப்போது, நடிகை ரோகினி அளித்த புகாருக்கு எச்.ராஜாவும், காயத்ரி ரகுராமும் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?












Click it and Unblock the Notifications