அதிர்ச்சியில் சீமான்... மேலும் ஒரு மாவட்ட தலைவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலங்களாகவே பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் வரிசையாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் தான் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கிடையே கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக இப்போது அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியைச் சீமான் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். முதலில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருந்த சீமான், 2016 சட்டசபைத் தேர்தல் முதல் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார்.

அதன் பிறகு அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி, எப்போதும் கூட்டணி அமைத்தே இல்லை. மேலும், வேட்பாளர்களில் 50% பெண்களையும் நிறுத்தி வருகிறது.
விலகல்:
இந்தச் சூழலில் சமீப காலமாகவே அக்கட்சியில் இருந்து வரிசையாக பல்வேறு நிர்வாகிகளும் விலகி வருகிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் தொண்டர்கள் எனப் பலரும் விலகி வருகின்றனர். கட்சியில் இருந்து விலகும் பலரும் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவனும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன விடுதலை அரசியல் என்று இது நாள் வரை நான் பயணித்து வந்த 10 ஆண்டுகளுக்கு மேலான இனிமையான பயணத்தை இன்றோடு முடித்துக்கொள்கிறேன் "இன்றோடு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்" இது நாள் வரையிலும் உடன் பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இருந்து விலகியவர்கள்:
கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் நாம் தமிழர் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் 32 பேர் மொத்தமாகக் கட்சியில் இருந்து விலகியிருந்தனர். 15 ஆண்டுகளாகக் கட்சிக்கு வேலை செய்தும் கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்றும் அவர் விமர்சித்து இருந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டவர் இந்த சுப்பையா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன் உட்பட பலர் விலகியிருந்தனர். தொடர்ந்து பின்னர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன், நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளவஞ்சி, நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் தேவேந்திரன் எனப் பலரும் வரிசையாக விலகினர். இவர்களில் பலரும் தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications