மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி.. மருத்துவர் கார்த்திகா மரணம்..உயிரை பறித்த வளைகாப்பு நிகழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியான 29 வயது மருத்துவர் கார்த்திகா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் ஆரம்ப சுகாதார நிலை மருத்துவரான 30 வயதான சண்முகப்ரியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்குள் அடுத்தாக ஒரு கர்ப்பிணி மருத்துவர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த மருத்துவர் ராமலிங்கம் - மணியம்மாள் தம்பதியினரின் மகள் கார்த்திகா (28). கார்த்திகா ஒரு மருத்துவராவார். அவரது கணவர் கார்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கார்த்திகாவுக்கு பாதிப்பு

கார்த்திகாவுக்கு பாதிப்பு

இந்நிலையில், மருத்துவர் கார்த்திகாவிற்கு கடந்த வாரம் போளூரிலுள்ள வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கார்த்திகாவிற்கு திடீரென உடல்நலககுறைவு ஏற்பட்டிருக்கிறது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இதையடுத்து கர்ப்பிணி மருத்துவர் கார்த்திகாவுக்கு எடுத்த கொரோனா டெஸ்ட்டில் பாஸிடிவ் என வந்ததையடுத்து திருவண்ணாமவை அரசு மருத்துவமனையில் கார்த்திகா சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலன் இன்றி கார்த்திகா பரிதாபாமாக உயிரிழந்தார்.

எச்சரிக்கை முக்கியம்

எச்சரிக்கை முக்கியம்

பொதுவாக கொரோனா பலரையும் பலியாக்கி வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கொரோனா யாரையாவது பாதிக்க தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்கி குறைவாக இருக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவிடம் இருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இன்று சென்னை மருத்துவனையில் கொரோனாவினால் மருத்தவர் கார்த்திகா இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

அண்மையில் டெல்லியில் ஒரு கர்ப்பிணி மருத்துவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேசிய வார்த்தைகளை பாருங்கள். "கொரோனா வைரஸ் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என்பதை தெரிந்து கொண்டேன். இந்த வைரஸை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேச முடியவில்லை. இருந்தபோதிலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பேசுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். உங்களையும், உங்கள் நேசத்துக்குரியவர்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார் தயவு செய்து கவனமாக இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+