தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை.. லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
Recommended Video
சென்னை: சென்னையில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் தடையை மீறி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களை நடத்தியதால் பரபரப்பு நிலவுகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடப்பு சட்டசபை கூட்டதொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாராப்பேட்டையில் கடந்த ஆறு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி, நீலகிரி, மதுரை, நெல்லை, வேலூர், சேலம் என அனைத்து ஊர்களிலும் கடந்த 15ம் தேதி முதல் போராட்டஙகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று தடையை மீறி சென்னையில் சட்டசபையை முற்றுகையிட்டு இஸ்லாமிய கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். .இந்த சூழ்நிலையில் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல மாவட்ட ஆட்சியர் அலுவலங்களை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கியும் பேரணி சென்று இஸ்லாமியர்கள் போராட்டம். நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை, திருச்சி, கோவை, கரூர், மதுரை, கன்னியாகுமரி, கடலூர், வேலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரணி நடத்தினார்கள்.
நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகிறார்கள். மற்ற மாநிலங்கள் எதிர்க்கும் போது தமிழகம் மட்டும் எதிர்க்க மறுப்பது ஏன்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க பல ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிந்தனர்..
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications