ரெய்டு விட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.. 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை.. கட்டு கட்டாக பறிமுதல்
சோதனையின் முடிவில் கணக்கில் வராத 34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழ்நாடு முழுக்க ஒரே நாளில் நேற்று 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வைக்கப்பட்டு வந்துள்ளன. முக்கியமாக பல பணிகளை செய்ய மக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
பத்திரப்பதிவு பெறுவதற்கு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

புகார்கள்
இப்படி தொடர் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றுள்ளது. அதிகாரிகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன. இந்த புகார்களை பட்டியல் எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் உள்ள 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி ஆய்வுகளை நடத்தினர். நேற்று பிற்பகல் இந்த ரெய்டு தொடங்கியது. நேற்று மாலை - இரவு வரை ரெய்டு தீவிரமாக நடைபெற்று இருக்கிறது.

ரெய்டு
முக்கியமாக தேனி, நெல்லை மாவட்டங்களில் இருந்து அதிக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார்கள் தொடர்பாகவும் ரெய்டுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் திட்டமிட்டு முறையாக ரெய்டு செய்துள்ளனர். ரெய்டு நேரத்தில் ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உள்ளே இருக்கும் ஆவணங்களை வைத்து.. எந்தெந்த பணிகளை செய்ய காசு வாங்கி உள்ளனர். எந்தெந்த பணிகளுக்கு காசு வாங்கவில்லை என்று சோதனை செய்துள்ளனர்.

சோதனை
சோதனையின் முடிவில் கணக்கில் வராத 34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. டேபிளில் இருந்த கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணம் எல்லாம் பல்வேறு சான்றிதழ்கள் பெற வாங்கப்பட்ட லஞ்ச பணம் ஆகும். மக்களிடம் இலவசமாக பணிகளை செய்யாமல் அல்லது கட்டண தொகையை மட்டும் வாங்காமல் கூடுதலாக வாங்கிய லஞ்ச பணம் ஆகும்.

கடலூர்
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இங்கே ஊழல் தடுப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் நேரடி சோதனை நடந்தது. இங்கே பல கணக்கில் வராத ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இப்படி தமிழ்நாடு முழுக்க முறையாக திட்டமிட்டு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்த திடீர் சோதனையால் அரசு அலுவலகங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடமாகவே தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக பல்வேறு ரெய்டுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ரெய்டு இறுதியல்ல.. இது வரும் நாட்களிலும் தொடர வாய்ப்பு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications