இந்திக்கு தடை விதிக்கும் மசோதா.. முற்றிலும் வதந்தியே.. தமிழக உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி என்று தமிழக உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டசபைச் செயலர் கூறியதாகவும், வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளில் கரூர் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையில் தீவிர விவாதம் நடைபெற்றது. இதனிடையே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக நேற்றிரவு ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

அதில் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. இந்த மசோதா காரணமாக இந்தி விளம்பர பலகைகள், இந்தி விளம்பரங்கள், அரசு அலுவலகங்களில் இந்தி பெயர்கள், இந்தி விலாசங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்ய முயலும் என்று கூறப்பட்டன. சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ள நிலையில், திமுக மீண்டும் இந்தியை கையில் எடுத்துள்ளதாக சில விமர்சனங்கள் வந்தன.
இந்த தகவல் வெளியாகிய நிலையில் உடனடியாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என்றும் விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் மொழியை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் சட்டசபையில் இந்தி எதிர்ப்பு மசோதா எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு மசோதா தொடர்பாக தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி! தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.
இது முற்றிலும் வதந்தியே. "அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை" என்று சட்டசபைச் செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபைக் கூட்டத் தொடரில் இந்தி எதிர்ப்பு தொடர்பாக எந்த வகையான மசோதாவும் நிறைவேற்றப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications