பாஜகவில் "ரவுடிகளுக்கு" பொறுப்புகள் வழங்கப்படுகிறது.. தமிழிசை அண்ணாமலை மீது அட்டாக்.. முற்றும் மோதல்
சென்னை; தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை - தமிழிசை சௌந்தரராஜன் இடையே மோதல் முற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சி வளர்ந்துவிட்டதாக வாதங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய வளர்ச்சி எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஏற்படவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தமிழிசை அட்டாக்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் பாஜக செயல்பாடு குறித்து மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். அதில்., நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவர்கள். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்.
ஆளுநர் பணியை விட்டு நான் ஏன் இங்கே பணிகளை செய்கிறேன் என்றும் சிலர் அப்படி இப்படி பேசுகிறார்கள். கட்சியினருக்கே கேட்கிறேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?, என்று கூறியுள்ளார்.
தி இந்து பேட்டி: தி இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பேட்டியில், கட்சியில் சின்ன வருத்தம் உள்ளது. எனக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருந்தது. நான் இருந்த போது கட்டுப்பாடு இருந்தது. நான் சிலரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டேன். கட்சியில் இருக்க சிலருக்கு அனுமதி இல்லை. அதாவது சமூக விரோத ரவுடிகள் போல இருப்பவர்களை கட்சிக்குள் விட மாட்டேன்.
ஆனால் இப்போது அப்படி கட்சியில் சிலர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நான் அதற்கெல்லாம் கட்டுப்பாடு விதித்தேன். கட்சியில் இப்போது ரவுடிகள் சமீப காலங்களில் சேர்ந்து உள்ளனர். கட்சி நன்றாகத்தான் செயல்படுகிறேன்.
கட்சியில் கடுமையாக உழைக்கும் தலைவர்களுக்கு பதவி தர வேண்டும். மாநில தலைவர் சரியாக பணியாற்றுகிறார். அவரின் ஸ்டைல் வேறு. ஆனால் சொல்கிறேன்.. நானெல்லாம் இதை அனுமதிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு: முன்னதாக செய்தியாளர் சந்திப்பில், இன்னொன்று நாங்கள் எல்லாம் 2ம் இடம் வரக்கூடியவர்கள் இல்லை.. வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.. தேர்தலில் வியூகம் அமைத்தால்தான் வெற்றி பெறலாம். தேர்தல் கூட்டணி என்பது வியூகம். நாங்கள் வெற்றிபெற கூடிய நபர்கள். ஆனால் இரண்டாம் இடம் வந்துவிட்டோம்.
அதிமுக - பாஜக வாக்கை சேர்த்து இருந்தால் வென்று இருப்போம். கூட்டணி என்றால் கட்சி மோசம் போய்விட மாட்டோம். கூட்டணி வைக்கலாம் என்று நாங்கள் வியூகத்தை அமைத்தோம்.. சகோதரர் அண்ணாமலைக்கு அதில் விருப்பம் இல்லை. அதனால் செய்யவில்லை. அண்ணாமலையிடம் அதை நீங்கள் கேட்கலாம். எனக்கு கருத்து இருந்தால் நான் சொல்வேன், என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நான் மாநில தலைவரை எதிர்க்கிறேன் என்று சொல்ல மாட்டேன். கூட்டணி அமைத்தால் வென்று இருப்போம் என்று கூறுகிறேன். அவ்வளவுதான், என்றுள்ளார்.
அண்ணாமலை அட்டாக்: இந்த நிலையில்தான் எக்ஸ் செயலியில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
அதில்.. தமிழிசைக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததே அதிசயம். இப்போது அண்ணாமலையை விமர்சனம் செய்கிறார். அண்ணாமலைக்கு ப்ரீ ஹேண்ட் கொடுங்கள்.
தமிழிசையை வடஇந்தியாவிற்கு ஆளுநராக அனுப்புங்கள். அவர் அண்ணாமலையை தனியாக செயல்பட விட மாட்டார். பாஜகவில் ஒரு திராவிட கும்பல் உள்ளது. அது எஸ் வி சேகர், கல்யாணா ராமன், தமிழிசை குழு. இவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு ஆதரவான நெட்டிசன்கள் கடுமையாக போஸ்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications