“பதவி ஆதாயம் எனில்.. பாஜகவுக்குகூட தாவுவார்!” அன்வர் ராஜா மீது.. பொன்னையன் அடுக்கடுக்காக விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அவர் பதவி ஆதாயம் எனில் பாஜகவில் கூட இணைந்துக்கொள்ளகூடியவர்தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சித்திருக்கிறார்.

இது குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பொன்னையன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "அதிமுக கட்சியினுடைய 2 கோடி தொண்டர்களின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்வர் ராஜாவை நீக்கிவிட்டார். நீக்கப்பட்டவரை பற்றி கருத்து கூறுவது தேவையில்லை என்றே கருதுகிறேன். அன்வர் ராஜாவை பொறுத்த வரைக்கும், எந்த இயக்கத்திலும் கொள்கை பற்று இல்லாதவர்.

AIADMK BJP Anwar Raja

பாஜகவுக்கும் தாவுவார்

அவர் அண்ணாவுக்கும் விசுவாசி அல்ல, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விசுவாசி அல்ல, அவர்கள் வழியிலே நல்லாட்சி நடத்திய, நல்ல முறையில் கட்சியை கட்டி காக்கின்ற எடப்பாடி பழனிசாமிக்கும் விசுவாசி அல்ல. பாஜகவில் ஒரு நல்ல பதவி தருகிறோம், ஆதாயம் உள்ள பதவியை தருகிறோம், அதிகாரம் உள்ள பதவியை தருகிறோம் என்று அழைத்தால், அதிகாரத்திற்காகவும், பதவிக்காகவும் பாஜகவில் கூட சேர்ந்து கொள்வார். அப்படிப்பட்ட மனநிலைக்கு சொந்தக்காரர்தான் அன்வர் ராஜா.

புதிய காதல்

அவருக்கு வேண்டியது பதவியும் ஆதாயமும்தான். அவருக்கு உண்மையிலேயே முஸ்லிம்கள் மேல் பற்று இருக்கிறது எனில், அவர்களுக்கான தீவிர இயக்கத்திலே சேர வேண்டும். முஸ்லிம்களுக்காக பாடுபட வேண்டும். அதுதான் அவருக்கு சரியான இடம். அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றும், கொள்கை அற்ற, இரண்டு முறை பிஜேபியோட கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்த திமுக உடன் சேர்ந்திருப்பது என்ன நியாயம்? அந்த வரலாற்றை மறக்க கூடியவர் அல்ல அன்வர் ராஜா. இருந்தாலும் திமுகவோடு தற்போது புதிய காதல் எப்படி அவருக்கு வந்தது? எங்களோடு இருந்து கொண்டே திமுக கள்ள உறவு வைத்திருந்தார். அதை இன்று வெளிப்படுத்தியிருக்கிறார்.

"செல்லா காசு அன்வர் ராஜா"

ஸ்டாலின், அன்வர் ராஜாவுக்கு ஆதாய அதிகாரத்தை வாக்குறுதியாக தந்து இருக்க கூடும் என்றுதான் மக்களும், முஸ்லீம்களும் நினைக்கிறார்கள். அன்வர் ராஜா அரசியலில் ஒரு செல்லாக்காசு. அவர் ஒரு தலைவரும் அல்ல, கொள்கை பற்று உள்ளவரும் அல்ல, இஸ்லாமிய மக்கள் மைனாரிட்டிய எண்ணுகிற அளவிற்கு அவருடைய நிலை பரிதாப நிலையாக இருக்கிறது. அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.

எம்ஜிஆர் கட்சியை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்தவர். அவரை மிகவும் உதாசினப்படுத்திவிட்டீர்களோ? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு,

"பதவி ஆசை கொண்டவர்"

"இல்லை இல்லை, எம்ஜிஆர் இருந்த காலத்திலும், எம்ஜிஆர்க்கு பிறகும், அவர் எம்ஜிஆர் பற்றாளராக இல்லை. பதவி பதவி என்று பதவிக்காகவே அலைந்தார். அதிகாரம் உள்ள பதவி, ஆதாயம் என்பதற்காகவே கட்சியில் இருந்தார். அது எங்கு கிடைத்தாலும் பறந்துவிடுவார். அன்வர் ராஜா அப்படிப்பட்டவர் என்பதை நான் நன்கு அறிவேன்" என்று விளக்கமளித்தார்.

அடுத்தாக, எடப்பாடி பழனிசாமி மட்டுமே தன்னை தானே தானே முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். பாஜக அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணி ஆட்சி என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று சொல்கிறார்கள். எடப்பாடியால் அதை மறுக்க முடியவில்லையே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பொன்னையன், "இல்லை, இல்லை. எடப்பாடியார் தெளிவுப்பட கூறிவிட்டார். தேர்தலிலே கட்சிக்கு கூட்டணி, ஆட்சியிலே அண்ணா திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறிவிட்டார். எடப்பாடியாரின் சுற்றுப்பயணத்தில் மக்கள் அணி அணியாக லட்சக்கணக்கில் திரளுகிறார்கள். மக்கள் கூட்டணி எடப்பாடியாருடன் இருக்கிற காரணத்தால் தனியாட்சி கட்டாயமாக அமைப்போம்" என விளக்கமளித்தார்.

ஆனால் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலைதான் பாஜகவுக்கு ஏற்படும். பாஜக டார்ககெட் இந்த தேர்தல் கிடையாது. அதிமுகவை அழித்துவிட்டு பாஜக போட்டியிடும் என்று அன்வர் ராஜா சொல்கிறராரே என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பொன்னையன், "அன்வர் ராஜாவை பொறுப்பெடுத்தாதீர்கள் உங்கள் பத்திரிக்கையை பொருத்தவரைக்கும் அவரை ஒரு அரசியல்வாதி தலைவர் என்று கருதுவது நல்லதல்ல" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+