‛இந்துக்களின் சாவை கொண்டாடுகிறேன்’.. ஒடிசா ரயில் விபத்தில் வன்மம் கக்கிய நபர்.. யார் இவர்? சர்ச்சை
சென்னை: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட மொத்தம் 280 பேர் வரை பலியாகி உள்ள நிலையில் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் வன்மத்தின் உச்சமாக மத அடையாளத்தை கூறி ரயில் விபத்தை கொண்டாடிய நபரால் சர்ச்சை எழுந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் 7 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் என்ஜின் ஏ1, ஏ2 மற்றும் பி2 முதல் பி 9 வரையிலான 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதற்கிடையே தான் அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவில்லாத பொது பெட்டிகளும், ஒரு பிரேக் வேன் பெட்டியும் தடம்புரண்டது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின
இந்த விபத்தில் காலை 10 மணி நிலவரப்படி 280 பேர் வரை பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த கோர விபத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் சோகத்தில் உள்ள நிலையில் தான் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் மத அடையாளத்தை வெளிப்படுத்தி இந்த துயர சம்பவத்தை கொண்டாடியுள்ளார். பாபர் ஜாமன் யாசூஸ் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛பலிகளின் உண்மையான எண்ணிக்கையை ஏன் கூறவில்லை? அல்லது மோடி முதலமைச்சருக்கு போன் செய்தாரா. எப்படியிருந்தாலும் நான் இந்துக்களின் மரணத்தைக் கொண்டாடுகிறேன்'' எனும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு மக்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நாட்டில் பெரிய அளவில் ரயில் விபத்து நடந்து துயரத்தில் இருக்கும்போது இதுபோன்று கூறுவது தவறு. இதற்கு பதில் நாம் அனைவருக்கும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என சிலர் கூறியுள்ளார். அதேசமயத்தில் பலரும் இவர் மீது சட்டச நடவடிக்கை எடுக்க வேண்டும். இவரது ட்விட்டர் பதிவை முடக்கம் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.
இத்தகைய சர்ச்சைக்குரிய ட்வீட் செய்த நபரான பாபர் ஜாமான் யாசூஸ் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரீசில் இருப்பது போல் குறிப்பிடப்பட்டள்ளது. மேலும் அவர் தான் ஒரு வங்காளதேசத்தை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எனவும் எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் தான் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருப்பினும் கூட அவர் இன்னும் திருந்தவில்லை. ரயில் விபத்தை குறிப்பிட்டு ‛லுங்கி டேன்ஸ்.. லுங்கி டேன்ஸ்' என அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications