தர்ஷனை விடுங்க! தமிழின் "முதல்" சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை.. நாசமாக்கிய கொலை கேஸ்.. பற்றி தெரியுமா?
சென்னை: கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, தனது தோழி பவித்ரா கவுடாவை சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக தனது ரசிகர் ரேணுகா சுவாமியைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஒருவர் இதேபோன்ற கொலை வழக்கில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தர்ஷன் தனது காதலியை கிண்டல் செய்தவரை கொன்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்தது சிசிடிவி காட்சிகளில் உறுதியாகி உள்ளது.

கொலை: கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் "டி பாஸ்" தர்ஷன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ரேணுகா சுவாமி, சித்ரதுர்காவை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை மெசேஜாக அனுப்பி உள்ளார். இந்த பவித்ரா கவுடா கடந்த 10 வருடமாக தர்ஷன் உடன் காதலில் இருக்கிறார். காதலியை கிண்டல் செய்த ரேணுகா சுவாமியை பவுன்சர்ஸ் வைத்து தர்ஷன் மோசமாக தாக்கி உள்ளார்.
தமிழின் சூப்பர் ஸ்டார்: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஒருவர் இதேபோன்ற கொலை வழக்கில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
80 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவை உலுக்கிய ஒரு கொலையை தற்போது நிகழ்ந்த இந்த தர்ஷன் கொலை வழக்கு பலருக்கும் நினைவூட்டி உள்ளது. 1944 இல் நடந்த பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்குதான் அது. அந்த கொலை வழக்கு எம்.கே. தியாகராஜ பாகவதர்வின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். அவரது நெருங்கிய கூட்டாளி, நகைச்சுவை நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் தமிழ் சினிமாவின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்டவர். இருவரும் தமிழ் சினிமாவின் அடையாளமாக.. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தனர். முக்கியமாக பாகவதர் தென்னிந்தியாவின் டாப் நடிகராக இருந்தார். இவர்கள் இருவரும் 1944 இல் நடந்த பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இதில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாகவதரும் கிருஷ்ணனும் அந்த கொலை வழக்கில் 30 மாதங்கள் அந்தமான் சிறையில் கழித்தனர். அதற்கு பின் தனியுரிமை கவுன்சில் ( அப்போது உச்ச நீதிமன்றத்திற்கு சமமானது) அவர்களின் தண்டனையை ரத்து செய்தது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர்களுக்கான கிரேஸ் குறைந்து மார்க்கெட்டும் வீழ்ந்தது. அவர்கள் தமிழ் சினிமாவில் மொத்தமாக வீழ்ந்தனர்.
இப்போது தர்ஷன் மூலம் கொலை செய்யப்பட்ட ரேணுகா ஸ்வாமி மற்றும் பாகவதர் கொலை வழக்கில் சிக்கிய லட்சுமிகாந்தன் இருவரும் அவதூறான கருத்துகள்/கட்டுரைகளை எழுதியதற்காகவே கொலை செய்யப்பட்டனர். இரண்டு பேருமே அடியாட்களை வைத்து கொலை செய்யப்பட்டனர்.

எப்படி கொலை நடந்தது?: பாகவதர் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவர், அவரின் புகழ் மகத்தானது. உதாரணமாக, அவர் ரோஜா இதழ்களில் குளித்தார் என்றும், தினமும் சென்னையிலிருந்து திருச்சிக்கு வாடகை விமானம் மூலம் மீன்களை கொண்டு வந்து சாப்பிட்டார் என்றும் பரவலாக நம்பப்பட்டது.
அவரை பற்றி லட்சுமிகாந்தன் (பத்திரிகையாளர்) தவறான கிசு கிசுக்களை எழுதியதாக கூறப்படுகிறது. லட்சுமிகாந்தன் இரண்டாம் உலகப் போரின் போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஆவார். அதன்பின் அவர் பத்திரிக்கை துறையில் சேர்ந்து.. பத்திரிகைகளில் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய கிசுகிசுக்களை எழுதத் தொடங்கினார்.
பலரின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து பாகவதர் உட்பட பலரை பற்றிய மோசமான கிசுகிசுக்களை எழுதி வந்தார். லட்சுமிகாந்தன் தமிழ்த் திரையுலகின் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி எழுதி முதல்முறையாக கிசு கிசு வெளியிடும் முறையை தமிழ் பத்திரிக்கை உலகிற்கு கொண்டு வந்தார்.
இவர் அதிகமாக என் எஸ் கிருஷ்ணன் மற்றும் பாகவதர் பற்றி எழுதினார். இதையடுத்து கிருஷ்ணனும், பாகவதரும் லட்சுமிகாந்தனின் பத்திரிக்கை உரிமத்தை ரத்து செய்யுமாறு அப்போதைய சென்னை ஆளுநரிடம் மனு அளித்தார். எல்லாத் தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் இருந்தபோதிலும், லட்சுமிகாந்தன் தொடர்ந்து அவதூறான கட்டுரைகளை எழுதினார்.
கொலை: இதில் ஏற்பட்ட தகராறில்தான் லட்சுமிகாந்தன் பாகவதர் மற்றும் என்எஸ்கே ஆட்கள் மூலம் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. நவம்பர் 8, 1944 அன்று, கந்தன் சென்னையின் ஒரு பரபரப்பான சாலையில் கத்தியால் குத்தப்பட்டார், மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பாகவதர் மற்றும் கிருஷ்ணன் கொலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டனர்.
ரத்து செய்தது: பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் நேரடியாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இதில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாகவதரும் கிருஷ்ணனும் அந்த கொலை வழக்கில் 30 மாதங்கள் அந்தமான் சிறையில் கழித்தனர். அதற்கு பின் தனியுரிமை கவுன்சில் ( அப்போது உச்ச நீதிமன்றத்திற்கு சமமானது) அவர்களின் தண்டனையை ரத்து செய்தது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications