கிளாம்பாக்கத்தை விடுங்க.. கோயம்பேட்டிலேயே வருகிறது ஜப்பான் ஸ்டைல் பிரம்மாண்ட பேருந்து நிலையம்.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் விரைவில் கோயம்பேட்டிலும் புதிய பேருந்து நிலையம் ஒன்று திறக்கப்பட உள்ளது.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலையத்திற்கு அருகே இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களை எல்லாம் பேருந்து நிலையங்களுடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Apart from Kilamakkam Bus Stand, Koyembedu to get another bus stand near metro in Japanese Style

அதாவது சென்னையின் எந்த பகுதியில் இருந்தும் மெட்ரோவிற்கு எளிதாக செல்ல வழி செல்லும் வகையில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் சென்னையில் இரண்டாம் கட்டமாக கட்டப்படும் மெட்ரோ நிலையங்கள் மற்றும் ஏற்கனவே கோயம்பேடு ரூட்டில் உள்ள மெட்ரோ நிலையங்களை எளிதாக இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

தற்போது கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கும் அரும்பாக்கத்திற்கும் இடையில் 2.5 ஏக்கரில் இந்த இணைப்பு பேருந்து நிலையம் அமைக்கப்படும். மக்கள் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மெட்ரோவிற்கு வருவதற்கு வசதியாக இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு வசதியாக மெட்ரோ அருகே மெட்ரோ மூலம் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. வரும் காலங்களில் இன்னும் சில மெட்ரோ நிலையங்களுக்கு அருகே பேருந்து நிலையம் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் இதேபோல் மெட்ரோவிற்கு மேல் பேருந்து நிலையங்கள் இருக்கும். அதே ஸ்டைலில் இந்த பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும்.

இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

116 கிமீ இரண்டாம் கட்ட திட்டம் ₹61,843 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

Apart from Kilamakkam Bus Stand, Koyembedu to get another bus stand near metro in Japanese Style

இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும்.

மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

கிளாம்பாக்கம்: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை.

இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+