அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் எப்படி இருக்கிறார்? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
சென்னை: அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் குறித்து வதந்திகள் பரவிய நிலையில் தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் காலமாகிவிட்ட நிலையில் அவருக்கு பதில் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்மகன் உசேன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியது முதலே தமிழ் மகன் உசேன் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்த போது ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட போது நடந்த பொதுக் கூட்டத்தில் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக தமிழ்மகன் சென்னையில் உள்ள அப்பல்லோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தமிழ்மகன் உடல்நிலை தொடர்பாக யாரோ வதந்தியாக பரப்பிவிட்ட செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த சூழலில் தமிழ்மகன் உசேன் குறித்து வரும் தகவல் பொய்யானது என அதிமுக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "அதிமுக அவைத்தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த தவறான செய்தியை, வதந்தியை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
ஒரு மூத்த அரசியல் தலைவரின் உடல்நிலை குறித்து, துளியும் அரசியல் நாகரிகம் இன்றி, விஷமத்தனமாக இப்படிப்பட்ட பொய் செய்திகளைப் பரப்புவது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய தவறான தகவல்களை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்மகன் உசேன் உடல்நிலை குறித்து மருத்துவமனை சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்மகனே உசேனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. இதனால் அதிமுகவினர் நிம்மதியடைந்துள்ளனர். அவர் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications