தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்த பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தவர்.. போராட்ட நாயகன் அப்பாவு! யார் இவர்?
சென்னை: தாமிரபரணி ஆற்றில் தனியார் கூல்டிரிங்க்ஸ் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக குரல் கொடுத்தவர் அப்பாவு.
Recommended Video
சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அவர்களில் 15 பேர் புதிய முகங்களாவர்.
பொதுவாக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியோ சபாநாயகர் பதவியோ கொடுத்து அழகு பார்த்து வந்தனர்.

நெல்லை மாவட்டம்
இதனால் இந்த முறை அமைச்சரவையில் நெல்லை மாவட்டத்து எம்எல்ஏக்களில் ஒருவர் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டடது. ஆனால் இப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த அப்பாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

வேட்பாளர்
அதன்படி அவர் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். யார் இந்த அப்பாவு என்பதை பார்ப்போம். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 49 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

முதல்முறையாக போட்டி
இந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட இந்த முறை அப்பாவுக்கே சீட் வழங்கப்பட்டது. போட்டியிட்டார், வென்றார். தற்போது 16ஆவது சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார். 69 வயதான அப்பாவு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து 1996 ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வென்றார்.

தேமுதிக வெற்றி
தமாகவிலிருந்து பிரிந்த போது 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சையாக இருந்து வெற்றி பெற்றார். பின்னர் 2006 இல் திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்றார். 2011 ஆம் ஆண்டு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ராதாபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் கட்சிக்காக அப்பாவு வாக்கு சேகரித்தார். எனினும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வென்றார்.

நீதிமன்றம் சென்ற அப்பாவு
இதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அப்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வெறும் 49 வாக்குகளில் அப்பாவு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக அப்பாவு புகார் அளித்தார். நீதிமன்றத்திற்கு சென்றார்.

தேர்வு
மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்படாமலேயே 2021 ஆம் ஆண்டு தேர்தலும் வந்தது, இந்த தேர்தலில் அப்பாவு சூப்பராக வென்றார். சட்டசபை நிகழ்வுகளில் அனுபவம் வாய்ந்த இவர் சபாநாயகராக தேர்வாகிறார்.

பிரச்சாரம்
விவசாயிகளின் உரிமைகளுக்காக அப்பாவு பிரச்சாரம் செய்தவர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் பேசியுள்ளார். பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications