பட்டைய கிளப்பும் ஸ்டாலின் அரசு.. அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை! வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் வெற்றிகரமாக மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் வகையில் ஜூலை 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (07.07.2025) அன்று தொடங்கப்பட உள்ளது.
அண்மையில் வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறியிருந்தார்.
மேலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.

45 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட உள்ளது. அது மட்டும் அல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பாடு மகளிருக்கு புதிய விலக்குகளும் அளிக்கப்பட இருக்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பப் பெண்கள், பிற ஓய்வூதிய திட்டங்களை பெறும் ஓய்வூதியம் பெறுவோர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இதனால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், ஜூலை 15ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து நகர், மாநகர், வட்டாட்சியர் அலுவலகங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற இருக்கிறது. மேலும் ஊராட்சி அளவிலான பகுதிகளிலும் 10,000 முகாம்களை நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது.
அதே நேரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்கும் வகையில் இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். இந்த நிலையில் ,"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 அன்று தொடங்கப்பட உள்ளது
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் துவங்கப்படுகிறது. இந்த திட்டமானது ஜூலை 15 ம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை வரும் 15.07.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டம். சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
அதனடிப்படையில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் முதல்கட்டமாக 112 முகாம்கள் 15.07.2025-ல் தொடங்கி 14.08.2025 வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக 96 முகாம்கள் 15.08.2025 முதல் 14.09.2025 வரை நடைபெறும். மூன்றாம் கட்டமாக 89 முகாம்கள் 15.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெறும் மற்றும் நான்காம் கட்டமாக 63 முகாம்கள் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
இத்திட்டத்தின்கீழ், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள். இடம் குறித்த விவரங்கள். அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள். சேவைகளை விவரித்து. அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள். தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 ம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. இந்தப்பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் நடைபெறும் முகாம்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஏப்ரல் மாத உரிமைத் தொகை ₹1000 எங்கே போச்சு? மெசேஜ் வராதவர்களுக்கு ஹேப்பி! போன்ல இந்த பட்டனை தட்டுங்க -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications